இன்றைய பலன்:
சிலர் உங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். எனினும் இன்று இறுதி வெற்றி உங்களுக்குத் தான். மாலைக்குள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
நிறம்: ஊதா, வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள கடக ராசிக்காரர்களே,
இவ்வாரம் சந்திரன் உலவும் அமைப்பு சிறப்பாக அமையும். சுக்கிரனின் இடப்பெயர்ச்சி சிறப்பானது. புதனால் நலமுண்டு. குரு, சனி, ராகு, கேது, சூரியன், செவ்வாயின் ஆதரவு இல்லை.
எந்த விஷயத்தில் ஈடுபடும் முன்பும் அதன் சாதக பாதகங்களை நன்கு ஆராயக் கூடியவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாட்களில் வாழ்க்கை ஓட்டத்தில் எதிர்பாராத சில தடைகள் முளைக்க வாய்ப்புண்டு. தொடக்கத்தில் அவற்றைக் கண்டு சற்றே தடுமாறுவீர்கள். என்றாலும் போகப்போக சுதாரித்து நடைபோடுவீர்கள். சுற்றி இருப்பவர்களில் யாரை நம்புவது, யாரிடம் உதவி கோருவது எனும் தயக்கம், குழப்பம் அவ்வப்போது மனதை ஆட்கொள்ளும். தெய்வம் துணை நிற்பதால் நாட்களின் போக்கில் தெளிவடைவீர்கள். வேலைகளைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட சற்றே அதிகரிக்கும். விடுபட்ட காரியங்களை நிறைவேற்ற அதிக உழைப்பும் திட்டமிடலும் தேவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்களது தனித்திறமைகள் வெகுவாகக் கைகொடுக்கும். வரவுகளுக்கும் செலவுகளுக்கும் சரியாய் இருக்கும். உங்களில் சிலருக்கு எதிர்பாராத தொகைகள் கிடைக்கக்கூடும். பயணங்களால் ஆதாயமில்லை. வழக்குகள் இழுத்தடிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் எதிர்பார்ப்புகளின்றி உழைப்பது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. வார இறுதியில் எதிரிகளின் போக்கைக் கவனித்துச் செயல்படுவது நல்லது.
குடும்பத்தார் இடையே ஒற்றுமை இருக்கும். பெற்றோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: நவம்பர் 5, 7
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9