இன்றைய பலன்:
யாரையும் குறைத்து எடை போட வேண்டாம். இன்று வெளி வேலைகள் எளிதில் நடந்தேறும். மனக் குழப்பம் ஒன்று முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5
நிறம்: ஊதா, வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே,
இவ்வாரம் நிகழும் இடப்பெயர்ச்சிக்குப் பின் சூரியனின் மங்கலத்தன்மை சிறக்கும். ராகு, செவ்வாய், சந்திரன், புதன், சுக்கிரன் நற்பலன்களைத் தருவர். குரு, சனி, கேது வலுவிழப்பர்.
தான, தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் உங்களது வருமான நிலை சிறப்பாக இருக்கும். வழக்கமான வரவுகள் தடையின்றிக் கிடைப்பதால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். மறுபக்கம் செலவுகளும் அதிகரிக்கும். அடுத்துவரும் நாள்களில் சவாலான பணிகள் காத்திருக்கும். தனிப்பட்ட திறமை, நண்பர்களின் உதவியுடன் முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்ற இயலும். பலரும் உங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுவர். உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். எனினும் பணிச்சுமை, அலைச்சல் காரணமாக அவ்வப்போது அலுப்பு தட்டும். ஆதாயம் அல்லாத பயணங்களைத் தவிர்த்திடலாம். புது மங்கலப் பேச்சுகளில் அவசரம் கூடாது. பணியாளர்கள் உழைப்புக்குரிய வளர்ச்சியைக் காண்பர். வியாபாரிகள் புதியவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம். வார இறுதியில் முக்கியச் சந்திப்புகள் வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளின் புத்திக்கூர்மை பளிச்சிடும்.
அனுகூலமான நாள்கள்: அக்டோபர் 13, 14
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5