இன்றைய பலன்:
விடாப்பிடியாக இருந்து திட்டமிட்டவற்றைச் சாதிப்பீர்கள். எனவே பாராட்டுகளுக்கும் ஆதாயங்களுக்கும் குறைவிருக்காது. சிறு தடைகளைச் சமாளித்துவிடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
நிறம்: பச்சை, மஞ்சள்
வாரப் பலன்:
அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,
இவ்வாரம் சந்திரனின் அருளைப் பெறலாம். சூரியனின் இடப்பெயர்ச்சி சிறப்பாக அமையும். புதன், சுக்கிரன் நலம்புரிவர். குரு, சனி, ராகு, கேது, செவ்வாயின் மங்கலத்தன்மை கெடும்.
மலை போன்ற பிரச்சினையையும் அமைதியாக கையாளக்கூடிய பக்குவசாலி என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாள்களில் அதிக எதிர்பார்ப்புகள் இன்றி செயல்படுவது நல்லது. தற்போது யாரிடம், என்ன பேசுகிறோம் என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேடிவரும் உதவிகளைப் புறக்கணிக்கவும் கூடாது. தெய்வ அருளால் எப்படியும் பணிகளை முடித்து நற்பெயரைத் தக்கவைப்பீர்கள் என நம்பலாம். வருமான நிலை சுமார் எனலாம். வரவுகளுக்கும் செலவுகளுக்கும் சரியாய் இருக்கும். உடல்நலம் ஒரே சீராக இருக்காது. எனவே உழைப்புக்குரிய ஓய்வு எடுப்பது நல்லது. பணியாளர்களுக்கு பாராட்டுகள் வந்து சேரும். சுயதொழில் புரிவோர்க்கு உரிய உதவிகள் கிட்டும். வார இறுதியில் மேற்கொள்ளும் பயணம் ஆதாயங்களைத் தரும். இச்சமயம் திடீர் சந்திப்புகள் சாதகமாகக்கூடும்.
குடும்பத்தார் சிறு கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது.
அனுகூலமான நாள்கள்: அக்டோபர் 17, 18
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9