இன்றைய பலன்:
வெட்டிப் பேர்வழிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்கப் பாருங்கள். பெரியவர்கள் துணை நிற்பர். செலவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
நிறம்: அரக்கு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள விருச்சிக ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரனின் அமைப்புகள் சிறப்பானவை. அதிசார குரு வகையில் சில நன்மைகள் கிட்டும். சந்திரனால் நலமுண்டு. சனி, ராகு, கேது, சூரியன், செவ்வாயால் சங்கடங்கள் இருக்கும்.
நல்லதையே நினைத்து நல்லதையே செய்யக்கூடிய பண்பாளர்கள் எனப் பலரும் உங்களைக் குறிப்பிடுவதுண்டு. இவ்வாரம் வரவுகள் நன்றாக இருக்கும். வழக்கமான வருமானம் மட்டுமின்றி, முன்பு கைநழுவிப்போன தொகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரித்தாலும் கவலையில்லை, அனைத்தையும் சமாளித்திடலாம். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். சில பணிகள் எளிதில் கைகூடும் எனில், சிலவற்றை முடிக்க பிறரது உதவியை நாட வேண்டியிருக்கும். உடல்நலம் பொதுவாக நன்றாகவே இருக்கும். இனிப்பு நீர், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் வழக்கமான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சொத்துகள் குறித்த சிக்கல்கள் மெல்ல சரியாகும். மங்கலப் பேச்சுகள் வளர்முகமாய் அமையும். பணியாளர்களும் வியாபாரிகளும் உழைப்புக்கேற்ற உயர்வைப் பெறுவர். வார இறுதியில் நல்ல தகவல் தேடி வரும்.
குடும்ப நலன் தொடர்பிலான முயற்சிகள் நல்ல முறையில் முன்னேற்றம் காணும்.
அனுகூலமான நாள்கள்: அக்டோபர் 27, 29
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6