இன்றைய பலன்:
விறுவிறுப்பான இந்நாளில் உங்களுடைய முயற்சிகள் எதுவும் சோடை போகாது. ஆதாயங்கள், பாராட்டுகள் மன நிறைவு தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
நிறம்: பச்சை, மஞ்சள்
வாரப் பலன்:
அன்புள்ள மிதுன ராசிக்காரர்களே,
இவ்வாரம் கேதுவின் அமைப்பு சிறப்பாக அமையும். குரு இடைநிலைப் பலன்களைத் தருவார். புதன், சந்திரன், சுக்கிரன் நலம்புரிவர். ராகு, சனி, செவ்வாய் வலுவிழப்பர். சூரியனின் இடப்பெயர்ச்சி சாதகமாகாது.
சிக்கலான நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படக் கூடியவர்கள் நீங்கள். இவ்வாரத் தொடக்கத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிக்க இயலாத வகையில் தடுமாற நேரிடும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனினும் வார மத்தியில் தடைகள் மெல்ல அகலும். பணிகள் வேகம் காணும். நண்பர்களில் சிலர் உண்மையான அக்கறையுடன் உதவிக்கரம் நீட்டும்போது அதைப் பற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அடுத்து வரும் நாள்களில் வருமான நிலை சுமார் எனும்படி இருக்கும். உடல்நலம் சற்றே பாதிக்கப்படலாம் என்பதால் உரிய ஓய்வு தேவை. ஆதாயமில்லாத பயணங்களைக் கைவிடுவது நல்லது. பணியாளர்கள் ஏற்றம் காண்பர். சுயதொழில் புரிவோர்க்கு உரிய உதவிகள் கிடைத்திடும். வார இறுதியில் திறமைசாலிகளின் அறிமுகம் கிடைக்கும் வாய்ப்புண்டு. அவர்களுடன் கைகுலுக்கலாம்.
குடும்பத்தார் இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.
அனுகூலமான நாள்கள்: அக்டோபர் 16, 17
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4