கைப்பேசி வெடித்து 8 வயதுச் சிறுமி மரணம்

1 mins read
36ede2e4-f668-4659-9ddf-6fab05cf42de
படம்: சமூக ஊடகம் -

கேரளாவில் கைப்பேசி வெடித்ததில் 8 வயது சிறுமி மாண்டார்.

சம்பவம் திருவில்வமாலா பகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) இரவு 10:30 மணிவாக்கில் நடந்தது.

மாண்ட சிறுமியின் பெயர் ஆதித்யா ஸ்ரீ என்றும் அவர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைப்பேசி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமிக்கு வாங்கிதரப்பட்டதாகவும், கடந்த ஆண்டு கைப்பேசியின் மின்கலன் மாற்றப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பேசியில் நீண்ட நேரம் காணொளி பார்த்ததால் சூடாகி வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெடிப்பால் சிறுமியின் வலது விரல்கள் துன்டாகின, உள்ளங்கையில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.

சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்