கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு: வேல்முருகன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணி குறித்த முடிவுகளுக்காக சற்றே பொறுமை காப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் பாமக, திமுக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம்," என்றார் வேல்முருகன். புதுவையில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்று வரும் 22ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!