ரூ.25 ஆயிரம் கோடி இழப்பீடு: திருமா வலியுறுத்து

சென்னை: வன்முறைச் சம்பவங் கள் காரணமாக கர்நாடகத் தமிழர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளதாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியா ளர்கள் மத்தியில் பேசிய அவர், கர்நாடகா அரசு ரூ.25,000 கோடி இழப்பீடு வழங்க வேண் டும் என வலியுறுத்தினார். “பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக புதுவை உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களை அழைத்து நதிநீர் சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும். தேதிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசிய மத்திய அமைச்சர் சதா னந்தா கவுடாவை அமைச்சரவை யில் இருந்து நீக்க வேண்டும்.

“நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியின ரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். முழு அடைப்புப் போராட்டத்தில் ஆளும் அதிமுக பங்கேற்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது,” என்று திருமாவள வன் மேலும் தெரிவித்தார்.

Loading...
Load next