பெண் கன்னத்தில் அறைந்த போலிஸ் : விளக்கம் கேட்கிறது ஆணையம்

சென்னை: பெண் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அறைந்த விவகாரத்தில் இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் ஆகியோருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் பாண்டியராஜன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் களில் ஒருவரின் கன்னத்தில் அறைவது போன்ற காணொளி சமூக ஊடகத்திலும் தொலைக் காட்சிகளிலும் பரவியதால் ஏராளமானவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் பெண் உரிமை அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, நாளிதழ்களில் இது தொடர்பாக வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன் கிழமை விசாரணைக்கு ஏற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!