போயிங் 737 மேக்ஸ்: இந்தியா உட்பட  பல்வேறு நாடுகளில் பரவும் தடை

போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதிப்பதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னணி விமான நிறுவனங்கள் அவற்றைத் தரை இறக்கிவிட்டன.
போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக் கான தடை உத்தரவு இந்தியாவில் நேற்று மாலை 4 மணியளவில் நடப்புக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவ னங்கள் இந்த வகை விமானங்களை தரை இறக்கி விட்டன. போயிங் 737 மேக்ஸ் வகையைச் சேர்ந்த ஐந்து விமா னங்களை நிறுத்தி வைத்ததோடு அவற் றின் பாதுகாப்பு தொடர்பாக போயிங் நிறு வனத்துடன் பேசிவருவதாகத் தெரிவித்
தது.

அதேபோல இந்த வகையைச் சேர்ந்த 14 விமானங்களையும் ஸ்பைஸ் ஜெட் நிறுத்திவிட்டது. அவற்றுக்குப் பதில் சில வழித்தடங்களில் மாற்று விமானங்கள் விடப்பட்ட நிலையில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையையும் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் கூறியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நைரோபியை நோக்கிச் சென்ற எத்தியோப்பிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அந்த போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் இருந்த 157 பேரும் மாண்டனர். கடந்த அக்டோபரிலும் இதே வகையைச் சேர்ந்த விமானம் இந்தோனீசியாவிலிருந்து புறப் பட்ட சிறிது நேரத்தில் விழுந்ததில் ஏராள மானோர் மாண்டனர்,

அதனைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் பாதுகாப்பு மீது உலகளவில் சந்தேகம் ஏற்பட்டது. ஒவ் வொரு நாடும் இதுகுறித்த பரிசீலைனையில் இறங்கின. கடந்த திங்கட்கிழமை முதல் இந்த வகை விமானத்துக்கு ஒவ்வொரு நாடும் தடை விதித்து வருகின்றன. பாதுகாப்பு கருதி சீனா, பிரிட்டன், ஆஸ்தி ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஏற்கனவே இந்த வகை விமானங்களுக்குத் தடைவிதித்துவிட்ட நிலையில் சிங்கப்பூர், இந்தியா, ஹாங் காங், வியட்னாம், நியூசிலாந்து, அரபு நாடுகள், கஜகஸ்தான் ஆகியனவும் தடைவிதிக்கத் தொடங்கி உள்ளன.
படம்: ராய்ட்டர்ஸ்