அதிர வைக்கும் அறிக்கை; உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாமிடம்

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் துறைகளில் ஈடுபட்டவர்களில்10,349 பேர் உயிரைமாய்த்துக்கொண்டிருப்பதாக, இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டிருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அவர்களில், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்கள் 4,586 என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியா முழுவதிலும் 2018ஆம் ஆண்டில் மட்டும், 1,43,516 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில் அதில் 7.7 விழுக்காட்டினர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை, 1,29,887. 2017ல் உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 10,655.

மேற்கு வங்கம், பிகார், உத்தரகண்ட், கோவா, சண்டிகர் போன்ற மாநிலங்கள், டாமன் மற்றும் டையு , தில்லி, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச பகுதிகளிலும், விவசாயிகள் அல்லது விவசாயம் சார்ந்தத் துறைகளில், பணியாற்றுகின்ற விவசாயத் தொழிலாளர்களில் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை என்கின்ற தகவலும், விவசாயம் சார்ந்த பணிகளில் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக அதிகமாக மகாராஷ்டிராவில் 17,972 விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டனர். தமிழ்நாட்டில் 13,896 பேர், மேற்கு வங்கத்தில் 13,255 பேர், மத்திய பிரதேசத்தில்11,775 பேர் மற்றும் கர்நாடகாவில் 11,561 பேர் என இந்த மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்ட மொத்த எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் 50.9% என்கிறது புள்ளிவிவரம்.

#விவசாயி #தற்கொலை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!