தாஜ்மஹாலை திறக்க அனுமதி

இந்தியா முழுவதும் உள்ள நினைவுச்சின்னங்களையும் புராதனச் சின்னங்களையும்  அருங்காட்சியகங்களையும் நாளை (ஜூலை 6) முதல்  திறப்பதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.   

ஊரடங்கு உத்தரவு காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் விதமாக, உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலும் டெல்லி செங்கோட்டையும் மூன்று மாதங்களுக்குப் பிறகு  நாளைமுதல் திறக்கப்பட உள்ளன. 

இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் கிருமி நாசினியால் மக்கள் கூடும் இடங்களைச்   சுத்தம் செய்யவேண்டும்.

குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே நினைவுச் சின்னங்களை சுற்றிப்பார்க்க அனுமதிக்க வேண்டும்.

உடல்வெப்ப பரிசோதனைக்குப் பிறகே சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளைத் தொல்லியல் துறை விதித்துள்ளது.

இப்போதைய ஊரடங்கு தளர்வின்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 820 வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.