கட்சி தாவிய மனைவியை விவாகரத்து செய்ய கணவர் முடிவு

மேற்கு வங்க மாநி­லத்­தில் திரி­ணா­முல் காங்­கி­ர­சில் சுஜாதா மண்­டல் கான் சேர்ந்து சில மணி நேரங்­களில் அவரை விவா­க­ரத்து செய்­யப் போவ­தாக பார­திய ஜனதா கட்­சி­யின் நாடாளு­ மன்ற உறுப்­பி­ன­ரான செள­மித்ரா கான் அறி­வித்­துள்­ளார்.

இத­னால் தம்பதியரின் பத்து ஆண்­டு­கால திரு­மண வாழ்க்கை முடி­வுக்கு வரும் எனத் தெரி­கிறது.

செள­மித்ரா கான், மேற்கு வங் காளத்தில் பாஜ­க­வின் இளை­யர் அணித் தலை­வ­ரா­க­வும் இருக்­கி­றார்.

“நான் உனக்கு முழு சுதந்­தி­ரம் வழங்­கி­னேன். இனி என் பெயரை எந்த இடத்­தி­லும் பயன்­ப­டுத்­தாதே. உனது பெய­ருக்­குப் பின்­னால் இருக்­கும் எனது பெய­ரை­யும் எடுத்து­விடு. திரி­ணா­முல் காங்­கி­ர­சில் சேர்ந்­தது மூலம் பெரும் தவற்­றைச் செய்­து­விட்­டாய்” என்­று செள­மித்ரா கான் ஆத்­தி­ரத்­து­டன் கூறி­னார்.

பார­திய ஜனதா கட்­சி­யின் மாநி­லத் தலை­வ­ரான திலிப் கோஷ், செள­மித்ரா கானின் மனை­வி­யா­கத்­தான் சுஜாதா அடை­யா­ளம் காணப்­பட்­டார். இது, அவ­ரு­டைய முடிவு. அவ­ருக்கு அதிர்ஷ்­டம் உண்டா­கட்­டும் என்று தெரிவித் தார்.

மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்­ஜி­யின் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் மற்­றும் இட­து­சாரி கட்­சி­க­ளைச் சேர்ந்த எம்­எல்­ஏக்­கள் அண்­மை­யில் பார­திய ஜனதா கட்­சி­யில் சேர்ந்து பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­னர்.

சென்ற திங்­களன்று திரி­ணாமுல் காங்­கி­ரஸ் எம்பியான சௌகதா ராய் முன்­னி­லை­யில் சுஜாதா மண்­டல் கான் அக்­கட்­சி­யில் சேர்ந்­தார்.

பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சுஜாதா மண்­டல் கான், ஊழ­லில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கே பாஜக அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்­கிறது. நேர்­மை­யா­ன­வர்­கள் அக்­கட்­சியை கண்­டு­கொள்­வ­தில்லை. கடந்த ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் என் கண­வர் வெற்றி பெறு­வ­தற்­காக கடு­மை­யாக உழைத்­தேன். பல்­வேறு தியா­கங்­ க­ளைச் செய்­தேன். ஆனால் அதற்­காக எந்­தப் பல­னும் கிடைக்­க­வில்லை. அன்­புக்­கு­ரிய தலை­வர் மம்தா பானர்­ஜி­யின் தலை­மை­யில் மக்­க­ளுக்கு சேவை­யாற்ற விரும்­பு­ கி­றேன். இதை எனது கண­வ­ரும் விரை­வில் உணர்­வார். ஆனால் அவ­ரு­டைய எதிர்­கா­லத்தை அவர்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும்,” என்­று சுஜாதா மண்டல் கான் கூறினார்..

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!