தியானன்மென் சதுக்க படுகொலை நினைவு தினம்: ஹாங்காங்கில் சிலர் கைது

ஹாங்காங்: தியா­னன்­மென் சதுக்க சம்­ப­வத்­தின் 32 ஆண்டு நினைவு தினத்­தை­யொட்டி ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­ற­லாம் என்ற எதிர்­பார்ப்­பில் ஹாங்­காங்­கில் நேற்று பல இடங்­களில் போலி­சார் குவிக்­கப்­பட்டு இருந்­த­னர்.

மேலும் இது தொடர்­பாக இரு­வர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­தாக போலி­சார் நேற்று ஊட­கங்­க­ளி­டம் கூறி­னர்.

செயுங், 20, என்­னும் உணவு விநி­யோ­கிப்பு ஊழி­ய­ரும் சோவ், 36, எனப்­படும் பெண்­ணும் விசா­ர­ணைக்­காக போலி­சின் கட்­டுப்­பாட்­டில் வைக்­கப்­பட்டு உள்­ள­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட பெண்­ணின் முழுப் பெயர் சோவ் ஹாங் துங் என்று கூறிய போலி­சார், சீனா­வில் உள்ள ஒரு ஜன­நா­யக இயக்­கத்­தின் ஆத­ர­வா­ள­ரா­க­வும் ஹாங்­காங் கூட்­டணி என்­னும் அமைப்­பின் துணைத் தலை­வ­ரா­க­வும் அவர் செயல்­பட்டு வந்­த­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

சீனா­வில் செயல்­பட்டு வரும் ஜன­நா­யக இயக்­கம் ஒவ்­வோர் ஆண்­டும் தியா­னன்­மென் சதுக்­கப் படு­கொ­லைச் சம்­ப­வத்­தின் நினை­வாக மெழு­கு­வத்தி ஏந்­தும் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்து வரு­கிறது.

தியா­னன்­மென் சதுக்­க போராட்டத்தில் பலி­யா­னோ­ருக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக நேற்று மாலை விக்­டோ­ரியா பார்க் செல்ல இருப்­ப­தாக சோவ் கூறி­யி­ருந்­த­தாக ஊட­கங்­கள் கூறின.

அத­னைத் தொடர்ந்து தமது அலு­வ­ல­கத்­தின் அருகே அப்­பெண் கைது செய்­யப்­பட்­டதை ஊட­கங்­கள் உறு­திப்­ப­டுத்­தின.

1989ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிக்கும் ஜூன் 4 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் தியானன்மென் சதுக்கத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அந்த சதுக்கத்தின் அருகே போராட்டம் நடத்தினர். அவர்களை ஒடுக்க ராணுவம் முற்பட்டபோது அது வன்முறையில் முடிந்தது. அதில் எத்தனை பேர் உயிரிழந் தனர் என்ற விவரத்தை சீன அர சாங்கம் வெளியிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!