தலைவர்கள், நீதிபதிகள், செய்தியாளர்களின் கைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்

புது­டெல்லி: இஸ்­‌ரேல் நாட்­டின் கண்­கா­ணிப்பு நிறு­வ­னத்­தின் 'பெகாசஸ்' என்ற செய­லி­யைக் கொண்டு இந்­தி­யா­வில் முந்­நூ­றுக்­கும் அதி­க­மா­னோர் உளவு பார்க்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மத்­திய அமைச்­சர்­கள் இரு­வர், மூன்று எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், நீதி­ப­தி­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள், தொழி­ல­தி­பர்­கள் உள்­ளிட்ட பல முக்­கி­யப் புள்­ளி­கள் உளவு பார்க்­கப்­பட்­ட­வர்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரு­டைய கைபே­சி­களும் ஒட்­டுக் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் அதன் வழி கிடைத்த உள­வுத் தக­வல்­கள் இந்­திய அர­சுக்கு விற்­கப்­பட்­ட­தா­க­வும் புகார் எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மத்­திய அரசு இதை வலு­வான ஆதா­ரங்­க­ளற்ற குற்­றச்­சாட்டு எனத் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது.

பிரான்ஸ் நாட்­டைச் சேர்ந்த லாப­நோக்­க­மற்ற அமைப்­பும் அம்­னெஸ்டி இன்­டர்­நே­ஷ­னல் அமைப்­பும் இணைந்து மேற்­கொண்ட புல­னாய்வு நட­வ­டிக்­கை­யின் மூலம், உல­கெங்­கி­லும் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த சுமார் ஐம்­ப­தா­யி­ரம் பேர் இவ்­வாறு உளவு பார்க்­கப்­பட்­டது தெரி­ய­வந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தைச் சேர்ந்த தன்­னார்­வ­ல­ரான திரு­மு­ரு­கன் காந்தி, செய்­தி­யா­ளர்­கள் இஸாம் சிங், ரோகினி சிங், ரித்­திகா சோப்ரா, முஜ­மின் தலில் ஆகி­யோ­ரின் கைபே­சி­கள் ஒட்­டுக் கேட்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. முன்­னணி செய்தி நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த செய்­தி­யா­ளர்­கள் பல­ரும் உளவு வளை­யத்­துக்­குள் இருந்­துள்­ள­னர்.

எனினும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் பலரது பெயர்கள் வெளியிடப்படவில்லை. அவை பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சமயத்தில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!