இந்தியாவில் ‘ஓமிக்ரான்’: இருவருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றுள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு மரபணுப் பரிசோதனை

புது­டெல்லி: உரு­மா­றிய கொரோனா வகை­யான 'ஓமிக்­ரான்' தொற்றுப் பாதிப்பு இந்­தி­யா­வுக்­குள்­ளும் ஊடு­ருவி உள்­ளது. தென்­னிந்­திய மாநி­ல­மான கர்­நா­ட­கா­வில் இரு கொரோனா நோயா­ளி­க­ளுக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது பரி­சோ­தனை வழி உறு­தி­யாகி உள்­ளது.

இத்­த­க­வலை இந்­திய சுகா­தார அமைச்சு நேற்று மாலை தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரும் ஆட­வர்­கள் என்­றும் அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்றும் அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

46 மற்றும் 66 வயதுடைய இருவரிடமும் தொற்றுக்கான கடும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மற்ற உலக நாடுகளிலும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களிடம் கடும் அறிகுறிகள் தென்படவில்லை என்று லால் அகர்வால் சுட்டிக்காட்டினார். பெங்களூரு விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதற்­கி­டையே, தொற்று அபா­யம் அதி­கம் உள்­ள­தா­கக் கரு­தப்­படும் நாடு­களில் இருந்து இந்­தி­யா­வுக்கு வரும் பய­ணி­க­ளின் தொற்று பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் மெல்ல அதி­க­ரித்து வரு­கிறது.

தொற்று அபா­யம் உள்ள நாடு­களில் இருந்து புது­டெல்லி வந்த மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

புது­டெல்­லி­யின் இந்­திரா காந்தி அனைத்­து­லக விமான நிலைய அதி­கா­ரி­கள் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­த­னர். ஏர் ஃபிரான்ஸ் விமா­னத்­தில் பய­ணம் செய்த மூவ­ருக்­கும் லண்­ட­னி­ன் இ­ருந்து வந்த பயணி ஒரு­வ­ருக்­கும் கொவிட்-19 தொற்­றி­யி­ருப்­பது பரி­சோ­த­னை­களில் தெரி­ய­வந்­தது.

அவர்­க­ளது பரி­சோ­தனை மாதிரி­கள் நோய்க் கட்­டுப்­பாட்டுக்­கான தேசிய நிலை­யத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக விமான நிலைய அதி­காரி கூறி­னார். அவை ஓமிக்­ரான் வகைக் கிரு­மியா இல்­லையா என்­ப­தைக் கண்­ட­றிய அங்கு மரபணுச் சோத­னை­கள் நடத்­தப்­படும்.

ஏற்­கெ­னவே வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஆறு பய­ணி­க­ளின் மாதி­ரி­கள் மர­பணு சோத­னைக்­காக அனுப்பிவைக்­கப்­பட்டு அதன் முடி­வுக்­காக சுகா­தார அமைச்சு காத்­தி­ருக்­கிறது.

இதற்­கி­டையே, அதிக அபா­ய­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து மும்பை வந்த 76 பேரை அங்­குள்ள அதி­கா­ரி­கள் அடை­யா­ளம் கண்டு கிரு­மிப் பரி­சோதனை செய்­ய­ உள்­ள­னர். இந்த 76 பேரும், ஒன்­றுக்கு மேற்­பட்ட ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வான தென்­னாப்­பி­ரிக்கா, நைஜீ­ரியா போன்ற நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!