வழக்கறிஞராக இவைதான் காரணம்: அதிபர் ஹலிமா

வசதிகுறைந்த குடும்­பத்­தில் பிறந்­த­போ­தும், எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளோ­ருக்­கும் வசதி வாய்ப்­பற்­றோ­ருக்­கும் நீதி கிடைக்­கச் செய்ய ஏது­வாக வழக்­க­றி­ஞ­ராக வேண்­டும் என்ற எண்­ணம் சிறு வய­தி­லேயே அதி­பர் ஹலிபா யாக்­கோப்­பிற்கு உதித்­தது.

தந்தை இருந்­த­போதே ஏழ்மை நிலை­யில் இருந்த அதி­பர் ஹலி­மா­வின் குடும்­பம், தந்தை இறந்த பிறகு மேலும் சிர­மத்­திற்­குள்­ளா­கி­யது.

தம் தாயார் நடத்­திய உணவுக் கடை­யில் அவ­ருக்கு உத­வி­யாக இருந்தே தமது குழந்­தைப் பரு­வத்­தின் பெரும்­பகு­தி­யைக் கழித்­தார் அதி­பர் ஹலிமா.

"வசதி இல்­லா­தோ­ரி­டம் குறை­வான அதி­கா­ரமே இருந்­த­தை­யும் அவர்­க­ளின் குரல் செவி­ம­டுக்­கப்­படா­த­தை­யும் கண்­டேன்," என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சட்­டத்­துறை முன்­னாள் மாண­வர் சங்­கம் 2021 டிசம்­ப­ரில் வெளி­யிட்ட 'லா லிங்க்' சஞ்­சி­கைக்கு அளித்த நேர்­கா­ண­லில் அதி­பர் ஹலிமா தெரி­வித்­துள்­ளார்.

இவை­யெல்­லாம், இவர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சேர்ந்து சட்­டம் பயில தூண்­டு­கோ­லாக விளங்­கின. பின்­னர் இவர் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சில் (என்­டி­யுசி) வழக்­க­றி­ஞ­ரா­கச் சேர்ந்­தார். தொழில்­சார் உற­வு­க­ளி­லும் வேலை­வாய்ப்பு உரி­மை­க­ளி­லும் தொழிற்­சங்­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் ஆலோ­சனை வழங்­கு­வது இவர் பணி­யாக இருந்­தது.

என்­டி­யு­சி­யில் 33 ஆண்­டு­கள் பணி­பு­ரிந்­தார் அதி­பர் ஹலிமா.

"ஊழியர்க­ளின் குர­லாக இருந்து, அவர்­க­ளின் உரி­மை­களுக்­கா­கப் போராடி, பாகு­பா­டற்ற வேலை­யி­டத்தை உறு­தி­செய்­த­தாக நான் நினைக்­கி­றேன். அது முழு மன­நி­றைவு அளித்த கால­கட்­டம்," என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

2001ஆம் ஆண்டு அர­சி­ய­லில் அடி­யெ­டுத்து வைத்த பிற­கும், எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள மக்­க­ளின் நல்­வாழ்­விற்­கா­கச் செய­லாற்­று­வ­தில் இவர் மிகுந்த கவ­னம் செலுத்­தி­னார்.

2011 முதல் 2013 வரை துணை அமைச்­ச­ரா­க­வும் பின்­னர் 2013 முதல் 2017 வரை நாடா­ளு­மன்ற நாய­க­ரா­க­வும் இருந்த இவர், வாழ்க்­கைச் செல­வி­னம், கட்­டுப்­ப­டி­யா­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, நியா­ய­மான வேலை­வாய்ப்பு விவ­கா­ரங்­கள் ஆகி­யவை தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் அடிக்­கடி பேசி­னார்.

திரு­வாட்டி ஹலிமா அர­சி­ய­லில் இறங்­கி­ய­போது, சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் பெற்ற பிறகு எம்.பி.யாகத் தேர்வுபெற்ற முதல் மலாய் பெண் இவர்­தான்.

தொழி­லா­ளர் இயக்­கம் மட்­டு­மின்றி, பரந்த சமூ­கத்­திற்­கும் பங்­களிக்க விரும்­பி­ய­தா­க­வும் மற்ற பெண்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யா­கத் திகழ வேண்­டும் என்ற பொறுப்பு தமக்­கி­ருப்­ப­தாக நினைத்­த­தா­க­வும் திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.

"தங்­க­ளது தொழிற்­சங்­கங்­களில் அல்­லது என்­டி­யு­சி­யில் தலை­மைத்­து­வப் பத­வி­களை ஏற்­கும்­படி இளம்­பெண்­களை இணங்­கச் செய்­யும் பொறுப்­பும் எனக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. வேலை-வாழ்க்­கைச் சம­நி­லை­யைப் பேணு­வ­தில் உள்ள சிர­மத்­தைச் சுட்டி, பல­ரும் அதனை ஒரு தடை­யா­கக் குறிப்­பிட்­ட­தால் அது ஒரு கடி­ன­மான பணி­யாக இருந்­தது," என்று நினைவு­கூர்ந்­தார் அதி­பர்.

கொள்கை வகுப்­ப­தில் பெண்­கள் பங்­கெ­டுப்­ப­தும் அவர்­கள் தங்­க­ளது கருத்­து­க­ளைச் செவி­மடுக்­கச் செய்­வ­தும் முக்­கி­யம் என்று தாம் நம்­பு­வ­தாக திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் பாலின சமத்­துவத்தை எட்­டு­வ­தில் பெரும் முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பும் அவர், மற்ற பெண்­க­ளுக்­குத் தாம் வழி­ய­மைத்­துத் தந்­துள்­ள­தாக நம்பு­வ­தா­க­வும் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!