ஓமிக்ரான் சூழலிலும் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது

“கொரோனா, டெல்டா, ஓமிக்ரான் பற்றி இப்­போது வெளி­வ­ரும் அதிர்ச்சி செய்திகளுக்கு மத்தியில் இப்­போது மயிலாடுதுறை மக்கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் கூடிய அணுகு முறை­யைக் கடைப்­பி­டிப்பதா­கத் தெரி­கிறது,” என்று கடைத்தெருவுக்குப் பேட்டிரி மோட்டார்சைக்கிளில் வந்த பீதாம்பரம், 48, என்ற தொழில்நுட்பர் கூறினார்.

“இது­வரை நாங்கள் எப்படியோ சமா ளித்து மீண்டுவிட்டோம். ஓமிக்­ரா­னை­யும் மீண்டு விடு­வோம்,” என்று கடைத்தெருவில் சாலை ஓரம் பூ, காய்கறி, பழம் விற்றுப் பிழைக்கும் ஏழை எளிய மக்கள் நம்பிக்கை யுடன் சொல்வதை நீங்கள் இப்போது மயிலாடுதுறை வந்தால் கேட்க முடியும்.

மயி­லா­டு­துறை, கடந்த இரண்டு ஆண்டு காலமாக உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவுக்கு விதிவிலக்கல்ல என்றாலும்கூட மாநிலத்தின் இதர பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இந்த நக­ரம் அவ்வளவாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட திரு சொக்கலிங்கம், 65, என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.

“கொரோனா தொற்று தலை­காட்­டி­யது முதலே மிக அதிகமாகப் பாதிக்­கப்­ப­டாத பகு­தி­யாக மயி­லாடு­துறை இருந்­து­வருகிறது. பொது­வாக பாது­காப்பு நடை­முறைகளை 65% மக்­கள் பின்­பற்­றி­வ­ரு­கி­றார்­கள்.

“நக­ரி­லும் மாவட்­டத்­தி­லும் 2019க்கு முன்பு போலவே இப்­போது மக்­கள் நட­மாடுவதைச் சில நேரங்­களில் பார்க்க முடி­கிறது. கொரோனாவை மக்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. ஜனவரி 6ஆம் தேதி மாநி­லம் எங்­கும் கெரோனா தொற்று கூடு­வ­தா­கச் சொல்லி அரசு வெளி­யிட்ட அறக்­கை­யின்­படி மயிலாடுதுறை மாவட்­டத்­தில் புதி­தாக கிருமி தொற்­றி­யோர் வெறும் மூவர்­தான்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்­தி­யா­வின் தென்­கோடி மாநி­ல­மான தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரான சென்­னை­யில் இருந்து கடற்­கரை வழி­யாக தெற்கு நோக்கிப் புறப்­பட்டு பாண்­டிச்­சேரி, கட­லூர், சிதம்­ப­ரம், சீர்­காழி, வைத்­தீஸ்­வ­ரன்­கோ­யில் ஆகிய நகர்­க­ளைக் கடந்து, சுமார் 280 கி.மீ., சென்­றால் மயி­லா­டு­துறை என்ற அழகான, பசுமை நகரை அடை­ய­லாம்.

சிதம்­ப­ரத்­தைக் கடந்த உட­னேயே குளிர் காற்றுடன்கூடிய டெல்டா பகு­திக்­குள் நுழையும் ஓர் உணர்வு ஏற்­பட்­டு­வி­டும்.

கர்­நா­ட­கா­வில் தோன்­றும் காவிரிக் கட­லில் கலக்­கும் முகத்­து­வா­ரம் அருகே சுமார் 15 கி.மீ. தெலை­வில் அமைந்­தி­ருக்­கும் கட­லோர நக­ரான மயி­லா­டு­துறை, வர்த்­தக நகர் அல்ல. வாழ்­வி­டத்­துக்குத் தோதான ஒரு நக­ரம். காவிரிக்கரையில் மயில்கள் ஆடியதால் மயூ­ரம் என்­றும் மாய­வரம் என்றும் மாயூ­ரம் என்­றும் கடை­சி­யாக 1980களில் இருந்து மயி­லா­டு­துறை என்­றும் அந்த நக­ரம் அழைக்­கப்­ப­டு­கிறது.

தமிழ்­நாட்­டில் 1,172 சதுர கிமீ பரப்­ப­ளவு உள்ள, மொத்­தம் 917,000 மக்­க­ளைக்கொண்ட ஆகப் புதிய 38வது மாவட்­ட­மாக உத­ய­மாகி இருக்கிறது மயி­லா­டு­துறை.

மயிலாடுதுறைதான் மாவட்­டத்­தின் தலை­ந­க­ரம். 1800களின் பிற்பகுதி முதல் ஊராட்சி, பிறகு நக­ராட்சி நிர்­வா­கத்­தில் இருந்து வரும் அந்த நக­ரில் மட்­டும் சுமார் 100,000 பேர் வசிக்­கி­றார்­கள். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி.

தேசிய சரா­சரி அள­வை­விட கல்­வித் தகுதி அதி­கம் உள்ள நக­ரம். பாரதிதாசன் பல்கலையுடன் இணைந்த, சென்ற நூற்றாண்­டில் தோற்­று­விக்­கப்­பட்ட ஏவிசி தன் னாட்சிக் கல்­லூரி உள்ளிட்ட ஏழு கல்லூரிகள், 1800களில் தோற்றுவிக்கப்பட்ட பள்ளிக் கூடங்கள், அரசு, தனியார் மருத்துவ மனைகள் எல்­லாம் உண்டு.

மயிலாடுதுறை புறநகர் பகுதிகளில் ஒருசில குடிசை வீடு­க­ளைப் பார்க்­க­லாம். அவற்றை அதிநவீன ‘ஆடி’ கார்கள் கடந்து செல்வதையும் பார்க்­க­லாம். வாகனங்கள் பெருத்த நகரம். விவசாயிகள் அதிகம். மாய­வ­ரம் ஏர்­க­லப்பை மிகப் பிர­ப­லம். ஊழி­யர்­களில் கால்வாசி பேர் அலுவலகங்கள், தொழிற்கூடங்களில் வேலை பார்ப்பவர்கள்.

புற­ந­கர்ப் பகு­தி­களில் மரங்­க­ளுக்­குக் கீழே புல் தரை­யில் அமர்ந்­த­படி இளை­ஞர்­கள் மடிக்­க­ணி­னி­களில் வேலை பார்ப்­பது வழக்கம். தகவல்தொழில்நுட்ப நகரம். ஒரு சில நேரங்­களில் புழுதி பறக்கும் கடைத் தெரு ஓரம் மடிக்­க­ணி­னி­களை வாங்­க­லாம். நுண்­ணிழை இணையச் சேவை உண்டு.

“ஆயி­ர­மா­னா­லும் மாயூ­ர­மா­காது; மாயூ­ரம் காற்­றைச் சுவா­சித்­தால் ஆயு­ளில் மூன்­றாண்­டு­கள் கூடும் என்­றெல்­லாம் வழி வழி­யா­கக் கூறப்­ப­டு­வ­துண்டு.

“மயிலாடுதுறை, ஒருபுறம் கரு­வாட்டு வாச­னை­யு­டன் கூடிய மிகப் பிர­ப­ல­மான சந்தைக்குப் பெயர் போனது.

“மறு­பு­றம், பழத்தில் சிறந்த ‘பாதிரி’ என்ற மயி­லா­டு­து­றைக்கே உரிய மாம்­பழம் வாசனை மூக்கைத் துளைக்கும்,” என்றார் அந்த நகரில் பிறந்து அங்­கேயே வசிக்கும் திரு ராஜேந்திரன், 74, என்ற விவசாயி.

கவிச்­சக்­க­ர­வர்த்தி கம்­பர், அபிராமி பட்டர், முத்துத்தாண்டவர், பிர­தாப முதலியார் சரித்­தி­ரம் என்­னும் தமி­ழில் வெளி­யான முதல் புதினத்தை எழுதிய மயூ­ரம் வேத­நாயகம் பிள்ளை, தமிழ்த் தாத்தா உ வே சுவாமிநாத ஐயரின் தமிழ் ஆசிரியரான மகா­வித்­வான் மீனாட்சி சுந்­த­ரம் பிள்ளை;

உல­கப் புகழ் பெற்ற நாதஸ்­வர மேதை தோடி ராஜ­ரத்­தி­னம் பிள்ளை, உலக சதுரங்க மன்னன் விசுவநாதன் ஆனந்த் முதல் தில்­லை­யாடி வள்­ளி­யம்மை, எழுத்தா ளர்­கள் கல்கி கிருஷ்­ண­மூர்த்தி;

திரைப்­பட கலை­ஞர்கள் எம்.கே. தியாகராஜ பாக­வ­தர், குமாரி கமலா, டி. ராஜேந்­தர் எஸ்.வி சேகர் உள்­ளிட்ட பல கலை­ஞர்­கள் பிறந்து வளர்ந்து உரு­வான இடம் மயி­லாடு துறை அல்­லது அருகிலுள்ள பகு­தி­க­ளில்­தான்.

நக­ரி­லும் புற­ந­கர் பகு­தி­க­ளி­லும் வரலாற்­றுச் சின்­னங்­களை, பூம்­பு­கார் போன்ற புரா­த­னங்­க­ளைக் காண­லாம்.

மிகப் பழமையான மாயூ­ர­நா­தர் பெரிய கோயி­லு­டன் பாடல் பெற்ற சைவ சம­யத் தல­மாக விளங்­கும் மயி­லா­டு­துறை, நவக்கிரகக் கோயில்­கள் அமைந்­துள்ள ஒன்­பது ஊர்­க­ளுக்­கும் மத்­தி­யில் உள்ள ஒரு நக­ரம்.

நாகூர் ஆண்­ட­வர் தர்­கா­வும் வேளாங்கண்ணி தேவா­ல­ய­மும் அருகே அமைந்து மயி­லா­டு­துறை பல சமய நக­ராக ஜொலிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பல இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

மாயூ­ரத்­திற்கே உரிய கடை­முழுக்கு இங்கு ஆண்டுதோறும் ஐப்­ப­சி­யில் பிர­ப­லம். திரு­வா­வ­டு­துறை, தரு­ம­பு­ரம், திருப்­ப­னந்­தாள் போன்ற சைவ மடங்­கள் மயிலாடுதுறையிலும் அதன் அரு­கி­லும்­தான் அமைந்­துள்­ளன.

சித்­தர்­காடு போன்ற சித்­தர்­கள் வாழ்ந்த இட­மும் இங்கேதான் உள்­ளது. திரு­வா­வடு துறை­யில் திரு­மூ­லர் 3,000 ஆண்­டு­கள் வாழ்ந்­த­தா­கக் கூறப்­படும் இட­மும் அவர் திரு­மந்­தி­ரத்தை இயற்­றி­ய­தா­கக் கூறப்­படும் ஒரு மரத்­தின் வம்­ச­மும் திரு­வா­வ­டு­து­றை­யில் இன்­ன­மும் இந்து சமய வழி­பாட்­டுக்­கு­ரிய இட­மாக இருக்­கின்­றன.

மாநி­லம் முழு­வ­தும் அனைத்து இடங் களுக்­கும் இணைப்­பு­க­ளைக் கொண்­டுள்ள மயி­லா­டு­துறை, முக்­கி­ய­மான ரயில் சந்­திப்பு நிலையம். அருகே 130 மீ தொலைவில் தெற்கே திருச்சி, வடக்கே புதுவை விமான நிலையங்கள் உள்ளன. புயல், நில­ந­டுக்­கம் முத­லான பேரிடர்களுக்­கும் இந்த மாவட் டத்­திற்­கும் அவ்­வ­ள­வா­கத் தொடர்­பில்லை.

காவிரி ஆற்­றுக்கு நடுவே அமைந்­துள்ள மயி­லா­டு­து­றை­யின் ஒரு பகு­தி­யான கூறை நாடு ஒரு காலத்­தில் நெசவு தொழி­லுக்­குக் கொடி­கட்டி பறந்­தது. முப்­போ­கம் விளை­யும் பச்சை வயல்­வெ­ளி­களுக்குப் பஞ்­ச­மில்லை.

இருந்­தா­லும், “எது இருந்து என்ன செய்­வது. அரசியல் ரீதியில் பெரிய தலைவர்களை உருவாக்காமல் போனதால் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகவே மயிலாடு துறையில் அடிப்படை வசதிகள் மேம்படாமல் நகரம் தேங்கியே கிடக்கிறது,” என்று குமாரி மோகனசுந்தரி, 27, என்ற முதுகலைப் பட்டதாரி (ஆங்கிலம்) கவலைத் தெரிவித்தார். இதே­போல் இங்கு பல­ரும் புலம்­பு­கி­றார்­கள்.

இப்படிப்பட்ட ஒரு நகருக்குச் செல்ல வேண்டும்; மயிலாடுதுறை காற்றைச் சுவாசிக்க வேண்டும், ஆயுள் பெருக வேண்டும் என்ற ஆசை உதயமாகிறதா? அவசரப்படாதீர். கொரோனாவை நினைத்துக் கொஞ்ச காலம் பொறுத்து இருங்கள். இரு­க­ரம் நீட்டி உங்களை வரவேற்க மயிலாடுதுறை விரைவில் முழு மூச்சில் தயாராகிவிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!