உக்ரேனியர்-இந்தியர் காதல் கதை

உக்ரேனியரான ஆனா ஹொரோடெட்ஸ்கா, 30, மார்ச் மாதம் தம்முடைய திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தார். டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அனுபவ் பாஷினை இவர் திருமணம் செய்யவிருந்தார்.

ஆனால், உக்ரேன் மீதான் ரஷ்யாவின் படையெடுப்பு, இத்தம்பதியின் எதிர்பார்ப்புகளையும் கனவையும் சீர்குலைத்தது.

தெற்கு டெல்லியில் எளிமையான முறையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர் இவர்கள்.

உக்ரேனியத் தலைநகர் கியவ் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியபோது அங்கிருக்கும் பதுங்கு குழிகளில் தங்கியிருந்த ஆனா, அனுபவிற்கு கைபேசியில் தொடர்புகொண்டார். ஆனாவை பதுங்கு குழியிலேயே தங்கியிருக்குமாறு அனுபவ் கூறியபோதும், அதனைக் செவிமடுக்காமல் இந்தியா வர முடிவு செய்தார் ஆனா.

“ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து நாங்கள் மூன்று முறை சண்டையிட்டுள்ளோம். முதலில், போர் சூழல் குறித்து அறிந்துகொண்ட அனுபவ், கியவ்வை விட்டு வெளியேறுமாறு என்னிடம் கூறினார். ஆனால் படையெடுப்பு நடக்காது என்று நான் கூறினேன்.

“இரண்டாவது முறை, படையெடுப்பு தொடங்கியவுடன் கியவ்வை விட்டு வெளியேறுமாறு அவர் என்னிடம் கெஞ்சினார். அப்போதும் நகரை விட்டு நான் வெளியேறவில்லை.

“நான் பதுங்கு குழி தங்கியிருந்தபோது என்னை அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறினார். ஆனால், நீ காத்துக்கொண்டிரு, நான் உனக்காக இந்தியா வருவேன் எனக் கூறினேன்,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் ஆனா சொன்னார்.

மார்ச் 17ஆம் தேதி டெல்லிக்கு வந்துசேர்ந்தார் இவர். விமான நிலையம் வந்திறங்கிய ஆனாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மேள, தாளங்கள் முழங்க ஆனாவை வரவேற்ற அனுபவ், “என்னை திருமணம் செய்துகொள்கிறாயா” என்று கேட்டார்.

“பயணத்தால் மிகவும் சோர்வடைந்து போயிருந்தேன். அனுபவ் இவ்வளவும் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறினேன். அவருடன் இருப்பதற்காகவே இந்தியா வந்திருக்கிறேன். அவருடைய தாயாரையும் நான் சந்தித்தேன். பூங்கொத்து கொடுத்து அவர் என்னை உற்சாகமாக வரவேற்றது மகிழ்ச்சியளித்தது” என்றார் ஆனா.

கியவ்வில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஆனாவை 2019ல் அனுபவ் முதன்முறையாக சந்தித்தார். இந்தியாவில் விடுமுறையைக் கழிக்க வந்த ஆனாவுக்கும் அனுபவுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

உக்ரேன் திரும்பிய ஆனா, கொவிட்-19 தொற்றின் முதல் அலை தொடங்குவவதற்கு முன்பு, சாலை மார்க்கமாக சுற்றிப் பார்க்க இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்தார்.

ஊரடங்கு சமயத்தில் ஆனா பத்திரமாக நாடு திரும்ப தேவையான உதவிகள் அனைத்தையும் அனுபவ் செய்து கொடுத்தார். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உருவானது. பிறகு 2021ல் இவர்கள் துபாயிலும் பிறகு அதே ஆண்டு இந்தியாவிலும் சந்திக்க, தம்முடைய மகனை மணந்து கொள்வாயா என்று ஆனாவிடம் அனுபவின் தாயார் கேட்டார். அதற்கு ஆனா சம்மதம் தெரிவித்தார்.

“நாங்கள் சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துகொண்டிருந்தபோது உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியது என்றார் அனுபவ்.

உடுத்தி மாற்றிக்கொள்ள தேவையான ஆடைகளோடு கையில் ஒரு காப்பி கலக்கு இயந்திரத்தையும் இந்தியாவுக்கு எடுத்து வந்தார் ஆனா. தம்முடைய பாட்டி கொடுத்த திருமண பரிசு என்கிறார் அவர்.

“போர் சூழலில் இதனை எடுத்துக்கொண்டு வரவேண்டுமா என்று நான் கேட்டேன். ஆனால், இது நம்முடைய திருமண பரிசு. என்னால் விட்டுவிட்டு வர இயலவில்லை,” என்று ஆனா கூறியதாக அனுபவ் சொன்னார்.

ஏப்ரல் 27ஆம் தேதி திருமணம் செய்ய இத்தம்பதியர் திட்டமிட்டுள்ளனர். உக்ரேனில் தம்முடைய பாட்டியிடம் விட்டுவிட்டு வந்த செல்லப்பிராணியை இந்தியாவுக்குக் கொண்டுவர விரும்புகிறார் ஆனா.

போர் விரைவில் முடியவும் உக்ரேன் சென்று செல்லப்பிராணியுடன் இந்தியா திரும்பிய பின்னர் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் இந்தியாவில் செலவிடத் திட்டமிட்டுள்ளார் ஆனா.

குறிப்பு: இச்செய்தி முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத் தளத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. தமிழ் முரசு வாசகர்கள் இதனை வாசித்து மகிழ்வதற்காக இச்செய்தியைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!