உக்ரேன் நெருக்கடி: பல்லாயிரம் கிலோ­மீட்­டர் கடந்து சென்று உத­வும் சிங்­கப்­பூர் இளை­யர்

ரஷ்­யா­வின் பிடி­யில் உக்­ரேன் உருக்­கு­லைந்து போயுள்­ளது.இதில் உக்­ரேன் மக்­க­ளுக்­குத் ­தான் பலத்த அடி. அவர்­க­ளுக்கு உதவ முன்­வரும் நபர்­களில் சிங்­கப்­பூ­ர­ரான பிர­வின் சுராஜ் சாந்­த­கு­மார் (படம்) என்­ப­வ­ரும் ஒரு­வர்.

“தி இண்­டர்­நே­‌ஷ­னல் ஃபேடரே­‌ஷன் ஆஃ லிப­ரல் யூத்” எனும் அமைப்பு மூலம் உக்­ரே­னிய நில­வரத்தை அறிந்­து­கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்­தது. நிலத்­தடி­யில் ஒரு சுரங்க அறைக்­குள் பதுங்கி இருந்த ஓர் உக்­ரே­னி­யக் குடும்­பத்­து­டன் நேரடி இணை­யக் காணொ­ளிச் சந்­திப்பு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்து. அந்­தக் குடும்­பம் தங்­கள் அனு­ப­வத்தை எங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­ட­னர். நான் கண்ட காட்­சி­கள் என்­னைப் பெரி­தும் பாதித்­தன,” என்­றார் 34 வய­தான துப்­பு­ரவு நிறு­வன உரி­மை­யா­ளர் பிர­வின்.

அந்­தக் குடும்­பத்­து­டன் பேசிய பின் உக்­ரே­னுக்கு நேர­டி­யா­கச் செல்ல அவர் முடி­வெ­டுத்­தார்.

உக்­ரே­னிய நில­வ­ரத்­தைப் பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள இணை­யத்­தில் தக­வல்­கள் தேடத் தொடங்கி­னார். உக்­ரே­னிய அதி­பர் வெளோ­டி­மிர் ஸெலன்ஸ்கி ஆற்­றிய உரை அவர் கண்­ணில் பட்­டது.

SPH Brightcove Video

“நாட்­டுப் பற்று, விட்­டுக்­கொடுக்­கா­மல் போரா­டு­வது, மீள்­தி­றன் போன்ற பண்­பு­கள் அவர் பேச்சில் வெளிப்பட்டன. எனக்­குள் ஏதோ ஒன்றை அவ­ரது பேச்சு தட்டி எழுப்­பி­யது. இந்­தப் போர் நெருக்­க­டி­யில் நான் ஏதா­வது செய்­தாக ­வேண்­டும் என்று தீர்­மா­னித்­தேன்,” என்­றார் பிர­வின்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள உக்­ரே­னி­யத் தூத­ர­கத்­து­டன் தொடர்பு கொண்டு உக்­ரேன் செல்­லத் தம் பெய­ரைப் பதிந்­து­கொண்­டார்.

போர்க்­கா­லப் படை­வீ­ரர், மூத்த தாதி ஆகிய பரி­மா­ணங்­களில் இருந்­துள்ள பிர­வின், போலந்­தில் தஞ்­சம் புகுந்­துள்ள உக்­ரே­னி­யர்­களுக்கு உதவ முடி­வெ­டுத்­தார்.

“ஆத­ர­வற்று இருப்­ப­வர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­கள் ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தும் உத­வி­தான்,” என்று தமிழ் முர­சுக்கு அளித்த பிரத்­தி­யேக பேட்­டி­யில் கூறி­னார் பிர­வின்.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் மாலை ஆறு மணி­ய­ள­வில் பிர­வின் போலந்து தலை­ந­கர் வார்­சா­வில் தரை­யி­றங்­கி­னார். அங்­குள்ள மனி­தா­பி­மான அமைப்­பு­களு­டன் சேர்ந்து அக­தி­க­ளுக்கு உணவு மற்­றும் உதவி வழங்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லா­னார்.

சிங்­கப்­பூ­ர­ரான சரண்­ஜித் வாலியா நடத்­தி­வ­ரும் வார்சா சேவா எனும் சீக்­கிய அமைப்­பும் உதவி வரு­கிறது. வார்சா சேவா போன்ற பல அமைப்­பு­கள் உக்­ரே­னிய அகதி­க­ளுக்கு நாள்­தோ­றும் இரண்டு முறை இல­வ­ச­மாக உணவு அளித்­து­வ­ரு­கின்­றன. குடி­நீர், போர்வை, உறங்­கும் பைகள் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை­யும் கொடுத்து உத­வு­கின்­றன.

“நான் அடுத்த மூன்று வாரங்­களுக்கு போலந்­தில் மனி­தா­பி­மான அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து உதவ இருக்­கி­றேன். நான் ஐந்து ஆண்டு­கள் அறுவை சிகிச்­சைப் பிரி­வில் மூத்த தாதி­யா­கப் பணி­பு­ரிந்­தேன். அந்த அனு­ப­வம் கைகொ­டுக்­கும் என நம்­பு­கி­றேன். அடிப்­படை மருத்­து­வச் சேவை­கள் தேவை­யென்­றால், அதை வழங்­க­வும் நான் தயார்,” என்­றார் அவர்.

இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று அவர் பய­ணம் மேற்­கொள்­வ­தாக இருந்­த­போது எதிர்­பா­ராத வித­மாக கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு பிர­வின் ஆளா­னார்.

ஆனால் தம் முடி­வில் பிர­வின் பின்­வாங்­க­வில்லை. குண­ம­டைந்­த­தும் தம் சொந்­தச் செல­வில் அவர் போலந்தை அடைந்­தார். நண்­பர்­கள் சிலர் அவர் பய­ணத்­துக்­காக பணம் அளித்து உத­வி­யுள்­ள­னர்.

“சிங்­கப்­பூ­ரர்­கள் பெரும்­பா­லா­னோர் உத­வும் மனப்­பான்மை உள்­ள­வர்­கள். என்­னைப் பார்த்து இன்­னும் பலர் உத­வி­செய்ய முன்­வ­ரு­வார்­கள் என நம்­பு­கி­றேன்,” என்று பிர­வின் குறிப்­பிட்­டார்.

8,000 கிலோ­மீட்­டர் தூரத்­தில் உள்ள உக்­ரே­னில் நடக்­கும் போரும் நம்­மைப் பாதிக்­கும் என்­பதை உணர்ந்து நம்­மால் முடிந்த சிறு­சிறு உத­வி­க­ளைச் செய்­ய­லாம் என்­கிறார் பிர­வின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!