கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு: மத்திய குழு நேரில் ஆய்வு

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில்

குரங்­கம்மை பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, கேரள அர­சுக்கு உத­வும் வகை­யில் மத்­திய சுகா­தா­ரத்­துறை குழு திரு­வ­னந்­த­

பு­ரத்­திற்­குச் சென்­றுள்­ளது.

இந்த குழு­வி­னர் கேர­ளா­வில் உள்ள மருத்­துவ கல்­லூ­ரி­யில் ஆய்வு நடத்­தி­னர்.

மேலும், கேர­ளா­வில் நிலை­மையை மிக உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் விரை­வில் கொல்­லம் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கு ஆய்­வுக்கு செல்ல இருப்­ப­தா­க­வும் மத்­திய குழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­க­ளி­

லி­ருந்து கேரளா வந்­த­வ­ருக்கு குரங்கம்மை ஏற்­பட்­டுள்­ளது.

குரங்கம்மை பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக கேரள சுகா­தா­ரத் துறை கூறி­யது.

குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­

பட்­ட­வர் இம்­மா­தம் 12ஆம் தேதி ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­க­ளி­லி­ருந்து கேரளா வந்­தி­ருந்­த­தாக அறி­யப்

­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த 11 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­க­வும் கேரள சுகா­தா­ர அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

அவர்­கள் திரு­வ­னந்­த­பு­ரம், கொல்­லம், பத்­த­ணாம்­திட்டா, ஆலப்­புழை, கோட்­ட­யம் ஆகிய ஐந்து மாவட்­டங்­களை சேர்ந்­த­வர்­கள் என்­றும் பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் அவர்­கள் ஒன்­றா­கப் பய­ணம் செய்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­களில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் பெற்­றோ­ரும் அடங்­கு­வர்.

அதிகாரிகள் குறிப்பிட்ட ஐந்து மாநி­லங்­க­ளி­லும் குரங்­கம்மை பர­வக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

அந்த மாவட்­டங்­களில் குரங்கம்மைப் பரவலைத் தடுக்க தனி­மைப்­ப­டுத்­தும் மையங்­கள் உடனடியாக அமைக்கப்­படும் என்று கேரள அரசு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!