போர் நிறுத்தம்: உக்ரேன் அதிபருடன் மோடி பேச்சு

புது­டெல்லி: உக்­ரேன், ரஷ்யா இடை­யே­யான மோதலை முடி­வுக்கு கொண்டு வரும் முயற்­சி­யாக அந்­நாட்டு அதி­பர் ஸெலன்ஸ்­கி­யு­டன் தொடர்­பு­கொண்டு பேசி­யுள்­ளார் இந்­திய பிர­த­மர் மோடி.

இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான எத்­த­கைய அமைதி முயற்­சி­யாக இருப்­பி­னும், அதற்­காக பங்­க­ளிக்க இந்­தியா தயா­ராக உள்­ளது என உக்­ரேன் அதி­ப­ரி­டம் பிர­த­மர் மோடி உறுதி அளித்­துள்­ளார்.

கடந்த சில மாதங்­க­ளாக உக்­ரேன், ரஷ்யா இடை­யே­ போர் நடை­பெற்று வரும் நிலை­யில், அப்­ப­கு­தி­யில் உள்ள அணு மின் நிலை­யங்­க­ளின் பாது­காப்பு குறித்து பிர­த­மர் மோடி தமது கவ­லையை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

உக்­ரே­னில் தற்­போ­துள்ள சூழல் குறித்து இரு நாட்டுத் தலை­வர்­களும் விவா­தித்­த­தா­க­வும் போரை நிறுத்த ராணு­வம் மூலம் தீர்வு காண முடி­யாது என்று பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

தூத­ர­கம் வாயி­லாக பேச்­சு­வார்த்­தையைத் துவங்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று வலி­யு­றுத்தி உள்ள பிர­த­மர் மோடி, உக்­ரேன் - ரஷ்யா இடை­யே­யான பிரச்­சி­னைக்கு அமைதி வழி­யில் தீர்வு காண வேண்­டும் என­வும் அதி­பர் ஸெலன்ஸ்­கி­யி­டம் வலி­யு­றுத்தி உள்­ளார். உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் வலியுறுத்தியபோதும் இந்தியா அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் போர் நிறுத்தத்துக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!