வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அரிய பொருள்கள் இந்தியா வந்தடைவதில் தாமதம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இருந்து கடத்­திச் செல்­லப்­பட்ட பல்­வேறு அரிய பழங்­கா­லப் பொருள்­கள் நாடு திரும்­பு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரியவந்­துள்­ளது.

நிர்­வாக ரீதி­யி­லான விவ­கா­ரங்­களே இதற்­குக் கார­ணம் என சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

எட்டு முதல் 15ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த பல்­வேறு அரிய கலைப் பொருள்­கள், சாமி சிலை­கள், அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு கடத்­திச் செல்­லப்­பட்­டுள்­ளன.

சிலைக்­க­டத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் அவற்­றைக் கண்­டு­பி­டித்து இந்­தி­யா­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

500 ஆண்­டு­கள் பழைமைவாய்ந்த அனு­மன் வெண்­க­லச் சிலை, கௌதம புத்­தர் சிலை ஆகி­யவை தீபா­வ­ளிப் பண்­டி­கைக்கு முன்­னரே வெளி­நா­டு­களில் இருந்து இந்­தியா வந்­த­டைந்­தி­ருக்க வேண்­டும்.

எனி­னும், சில நிர்­வா­கச் சிக்­கல் கார­ண­மாக வந்து சேர­வில்லை என இந்­திய தொல்­லி­யல் பிரி­வுத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"மீட்­கப்­பட்ட அரிய பொருள்­களை இந்­தி­யா­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு முன்­னர் அவற்­றுக்­கான போக்­கு­வ­ரத்­துச் செலவு, காப்­பீட்­டுத் தொகை ஆகி­ய­வற்­றைச் செலுத்த வேண்­டி­யி­ருக்­கிறது.

"இச்­செ­ல­வு­களை தொல்­லி­யல் துறை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது என்­றா­லும் சில நடை­மு­றை­களை பின்­பற்­று­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது," என்று அந்த அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் இருந்து 14-15ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த அனு­மன் சிலை பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு கடத்­தப்­பட்­டது. இதே­போல் பீகா­ரில் உள்ள குண்­டல்­பூர் கோவி­லில் 15ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த புத்­தர் சிலை பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு மாய­மா­னது.

இவை இரண்­டும் இந்­தி­யா­வுக்கு கொண்டு வரப்­படும் என மத்­திய கலா­சார அமைச்­சர் கிஷன் ரெட்டி பிப்­ர­வரி மாதமே அறி­வித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!