பட்டப்பகலில் பலர் கண்முன் சிவசேனா தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்

பட்டப்பகலில் பலர் கண்முன் சிவசேனா தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்

2 mins read
1963512b-ac15-4bc8-a0c7-116a9b96e6e9
(மேல்படம்) சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி (இடது) துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.(இடதுபடம்) சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறை. படங்கள்: ஏஃப்பி, இந்திய ஊடகம் -
multi-img1 of 2

அமிர்­த­ச­ரஸ்: சிவ­சேனா கட்­சித் தலை­வ­ரான 58 வயது சுதிர் சூரி நேற்று முன்­தி­னம் துப்­பாக்­கி­யால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் சீக்­கி­யர்­க­ளின் புனித நக­ர­மான அமிர்­த­சரசில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

அந்­ந­க­ரில் உள்ள குப்பை வீசும் இடத்­தில் இந்­துத் தெய்­வங்­க­ளின் சிலை­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூறி திரு சூரி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

அப்­போது பட்­டப்­ப­க­லில் பலர் கண்­முன் ஒரு­வர் அங்கு வந்து திரு சூரி­யைத் துப்­பாக்­கி­யால்

சுட்­டுக்­கொன்­ற­த­காக பஞ்­சாப் காவல்­துறை தெரிவித்­தது.

திரு சூரி­யைக் குறி­வைத்து அந்­தத் தாக்­கு­தல்­கா­ரர் துப்­பாக்­கி­யால் பல­முறை சுட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­பவ இடத்­தி­லேயே தாக்­கு­தல்­கா­ரர் பிடி­பட்­டார்.

உரி­மம் வழங்­கப்­பட்ட துப்­பாக்­கி­யைப் பயன்­ப­டுத்தி அவர் திரு சூரி­யைக் கொன்­ற­தாக நம்­பப்­ப­டு­கிறது.

திரு சூரிக்கு பஞ்­சாப் காவல்­துறை பாது­காப்பு வழங்­கி­ய­தாக அம்­மா­நில ஊட­கம் தெரி­வித்­தது.

சீக்கிய சமயத்துக்கு எதிராக திரு சூரி அவதூறு பரப்பியதாகவும் இழிவுபடுத்திப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இத­னால் சீக்­கி­யர்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் திரு சூரி மீது அவர்­கள் சினங்­கொண்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்­டில் திரு சூரி சீக்­கி­யப் பெண்­க­ளைத் தூற்­றிப் பேசிய, சீக்­கிய சம­யத்தை இழி­வு

­ப­டுத்திப் பேசிய காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வந்­ததை அடுத்து அவர் கைது செய்­யப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே குற்­றங்­க­ளைப் புரிந்­த­தற்­காக கடந்த ஜூலை மாதம் அவர் மீண்­டும் கைது செய்­யப்­பட்­டார்.

கடந்த செப்டம்பர் மாதம் பொற்கோயிலுக்கு அருகில் குடிபோதையில் புகையிலை மென்றுகொண்டிருந்ததாக ஆடவர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் கண்முன் அந்த இளையர் வெட்டிக்கொல்லப்பட்டார்.