நீதிபதி: மாட்டுச் சாணம் அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும்

அக­ம­தா­பாத்: மாட்­டுச்­சா­ணம் பூசப்­பட்ட வீடு, அணுக்­க­திர்­வீச்­சால் பாதிக்­கப்­ப­டாது என்­பது அறி­வி­யல்­பூர்­வ­மாக மெய்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறி இருக்­கி­றார் இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­தைச் சேர்ந்த நீதி­பதி ஒரு­வர்.

தாப்பி மாவட்ட அமர்வு நீதி­மன்ற நீதி­ப­தி­யான சமீர் வியாஸ், கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் ஒரு வழக்­கில் தீர்ப்பு வழங்­கி­ய­போது தெரி­வித்த இக்­க­ருத்து இப்­போ­து­ வெளி­யா­கி­யுள்­ளது.

குஜ­ராத்­தில் இருந்து மராட்­டிய மாநி­லத்­திற்­குப் பசுக்­க­ளை­யும் எரு­து­க­ளை­யும் கொண்­டு­சென்ற வழக்­கில், 22 வயது இளை­யர் ஒரு­வ­ருக்கு நீதி­பதி சமீர் வாழ்­நாள் சிறை­யும் ரூ.5 லட்­சம் (S$8,075) அப­ரா­த­மும் விதித்­தார்.

பசுக்­கள் கொல்­லப்­ப­டு­வது குறித்து மனக்­கு­றைப்­பட்­டுக்­கொண்ட அவர், பசு ஒரு விலங்கு மட்­டு­மன்று, அது நமது தாய் என்­றும் குறிப்­பிட்­ட­தாக ‘என்­டி­டிவி’ செய்தி கூறு­கிறது.

“பசு­வின் துளி ரத்­தம் நிலத்­தில் வீழ்­வது நின்­று­விட்­டால் இவ்­வு­ல­கில் எல்­லாப் பிரச்­சி­னை­களும் தீர்ந்­து­வி­டும்.

“பசுவை மைய­மா­கக் கொண்ட இயற்கை வேளாண்­மை ­மூ­லம் விளை­விக்­கப்­படும் உண­வுப்­பொருள்­கள் பல நோய்­க­ளி­ல் இருந்து நம்மை விடு­விக்­கின்­றன. பசுஞ்­சா­ணம் பூசப்­படும் வீடு­களை அணுக்­க­திர்­வீச்சு தாக்­கு­வதில்லை. பசு கோமி­யம் பல நோய்களைக் குணப்படுத்த ­வல்­லது என்­ப­தை அறி­வி­யல் உறு­திப்­ப­டுத்தியுள்ளது,” என்று திரு சமீர் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!