கல்வி ஒரு கண்; கழைக்கூத்து மறு கண்

‘எங்­க­ளுக்கு கல்வி ஒரு கண், கழைக்­கூத்து மறு கண்' என்­கி­றார்­கள் மானா­ம­து­ரை­யைச் சேர்ந்த சௌந்­த­ர­ரா­ஜன்-புஷ்பா தம்­ப­தி­யர்.

தமி­ழக அரசு இவர்­க­ளுக்கு கழைக்­கூத்துக் கலை­ஞர்­கள் என்ற சான்­றி­தழை வழங்கி இருக்­கிறது. இவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அர­சாங்க வீடு­கள் என மொத்­தம் 19 பேரைக் கொண்ட கூட்­டுக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

ஆறு சகோ­த­ரர்­கள், அவர்­க­ளின் மனை­வி­மார்­கள், பிள்­ளை­கள் அடங்கிய இக்குடும்­பத்­தி­னர் ஆண்­டு­தோ­றும் கிட்டத்தட்ட 10 மாத காலத்­திற்கு தமிழ்­நாட்டின் நான்கு திசை­க­ளுக்­கும் சென்று கிரா­மப்புறங்­களில் கழைக்­கூத்து நடத்­து­கி­றார்­கள். அதை 'கிராமிய சர்க்கஸ்' என்று இவர்கள் கூறுகிறார்கள்.

சௌந்­த­ர­ரா­ஜன், 35 -புஷ்பா, 28, தம்­பதி­க்கு மூன்று வய­தில் ஒரு பெண் குழந்தை இருக்­கிறது. இவ­ரும் இவ­ரின் சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரின் குடும்­ப­மும் திரு­நாங்­கூர் என்ற கிரா­மத்­தில் கழைக்­கூத்து காட்சி நடத்­தி­னார்­கள்.

“நான் செங்­கல்­பட்­டில் பிறந்­தேன். மது­ராந்­த­கத்­தில் பிளஸ்2 வரை படித்­தேன். முடிந்தவரை படித்த நான் எங்­கள் தொழிலைக் காக்க வேண்­டும் என்­பதற்­காகப் படிப்பை அத்­து­டன் முடித்­துக்­கொண்டு என் உறவுக்­கா­ர­ரான இவரை மணந்­து­கொண்­டேன்," என்று திருவாட்டி புஷ்பா, அரு­கில் இருந்த தன்­ கண­வரைக் காட்டிக் கூறி­னார்.

“நாங்­கள் ஆறு பேர் சகோ­த­ரர்­கள். ஆறு பேரும் ஒன்­றாக கூட்­டுக் குடும்­ப­மாக வசிக்கிறோம். தாயார் இல்லை. வய­தான தந்தை இருக்­கி­றார். இரு இரு குடும்­பங்களாகப் பிரிந்து பல ஊர்­களுக்­கும் சென்று வித்தை நடத்­து­வோம்.

“மேசை, நாற்­காலி, ஒலி­பெருக்கி, வலை­கள், போர்­வை­கள், திரைகள், வளை­யங்­கள், மின்னாக்கி (ஜெனரேட்டர்) உள்­ளிட்ட பல பொருள்­களை­யும் வளர்ப்பு விலங்­கு­க­ளை­யும் ஏற்­றிக்­கொண்டு வாடகை வாக­னத்­தில் ஊர் ஊரா­கச் செல்­வோம்.

“பெரிய கிரா­மங்களில் ஒதுக்­குப்­பு­ற­மான இடங்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­து, சர்க்­கஸ் கூடா­ரத்­தை அமைக்க மூன்று நாள்களாகும். கிரா­மத்­தில் யாரும் பயன்­ப­டுத்­தாத இடங்­களில் இலவசமாக தங்­கி அங்­கேயே சமைத்துச் சாப்­பி­டு­வோம்,” என்று சாப்­பாட்டு ராமன் என்ற தன்­ வித்தை குரங்கை இடுப்­பில் தூக்கி வைத்­துக்­கொண்டு கூறி­னார் திரு சௌந்­த­ர­ரா­ஜன்.

திரு­நாங்­கூ­ரில் கிட்டத்தட்ட 20 நாள்­கள் இவர்­க­ளின் கழைக்கூத்து நடந்­தது.

“ஒரு­வருக்கு நுழை­வுக் கட்­ட­ணம் ரூ.40 வசூ­லிப்­போம். கிராம மக்­கள் என்­ப­தால் பல­ரும் பேரம் பேசு­வார்­கள். கூட்டி குறைத்து வாங்­கிக்கொள்­வோம்.

“கழைக்­கூத்து  அன்­றாடம் இரவு 7 மணி முதல் 9 மணிவரை நடக்­கும். 6 மணிக்கே பாட்­டுப் போட தொடங்கிவி­டு­வோம். அதைக் கேட்டு மக்கள் வரத் தொடங்­கு­வார்­கள். நிகழ்ச்சி நடக்­கும்போது வெவ்­வே­றான இசையை ஒலி­ப­ரப்­பு­வோம்.

“என்­னி­டம் உள்ள சாப்­பாட்டு ராமன் குரங்கு கர்­ணம் போட்டு வித்தை காட்டும். டீ போடு­வது எப்­படி என்­பதை அதற்குக் கற்­றுக்­கொ­டுத்து வரு­கிறேன்.

“வீரன் என்ற ஆடு கைகொ­டுக்­கும், நெருப்­பில் பாயும். ராமு என்ற நாய்க்கு ஏணி­யில் ஏறி கீழே குதிப்­பதுபோல் பயிற்சி அளித்து வரு­கி­றேன்,” என்று திரு சௌந்­த­ர­ரா­ஜன் மேலும் கூறி­னார்.

நடுவே குறுக்­கிட்ட திரு­வாட்டி புஷ்பா, “எங்­க­ளு­டைய மாமி­யா­ரின் பெய­ரில் ‘ராஜ­ரா­ஜேஸ்­வரி சர்க்­கஸ் கம்­பெனி’ என்ற கழைக்­கூத்து கம்­பெ­னியை நாங்­கள் நடத்தி வரு­கி­றோம். இதை அர­சாங்­கத்­தில் பதிந்து இருக்­கி­றோம்.

“எங்­கும் கழைக்­கூத்து நிகழ்ச்­சியை நடத்­த­லாம் என்று காவல்­து­றை­யி­டம் சான்­றி­தழ் வாங்கி வைத்து இருக்­கிறோம். வளை­யம் சுத்­து­வது, வில்­லாக வளை­வது, என்­ கண­வ­ரின் தோள்­பட்டை­யில் பல்டி அடித்து ஏறு­வது போன்ற வித்தை­க­ளைச் செய்­வேன்,” என்று கூறி­னார் திருவாட்டி புஷ்பா.

“நான் பிளஸ்2 படித்­தது வரை கழைக்­கூத்­தில் ஈடு­ப­ட­வில்லை. அதன் பிறகு­தான் இந்­தத் தொழி­லில் ஈடு­பட்­டேன். பழக்­கம் என்­ப­தால் வித்­தை­கள் எல்­லாம் எனக்கு கைவந்த கலை­யாகிவிட்­டன.

“எங்களின் மூன்று வயது மக­ளை­யும் எங்­கள் குடும்­பத்துப் பிள்­ளை­க­ளை­யும் முடிந்த அள­வுக்குப் படிக்க வைத்­து­விடு­வோம். அதற்­குப் பிற­கு­தான் இத்­தொழி­லில் அவர்­களை ஈடு­ப­டுத்­து­வோம்.

“இந்­தக் காலத்­தி­லும் சரி, இனி­மேல் வரக்­கூ­டிய காலங்­க­ளி­லும் சரி வெறும் படிப்பு மட்­டும் உத­வாது. கல்வி அறி­வோடு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் அரி­தான ஒரு வித்­தை­யும் தெரிந்­தி­ருக்க வேண்­டும். இல்­லை­யெனில் பிழைக்க முடி­யாது.

“எங்­க­ளுக்கு கழைக்­கூத்து ஏற்­கெனவே ஒரு கண்­ணா­கி­விட்­டது. கல்­வியை நாங்­கள் மறு­கண்­ணாக பார்க்­கி­றோம். இதுவே எங்­கள் குடும்ப நம்­பிக்கை. எப்­ப­டி­யா­னா­லும் எங்­கள் தொழிலை அழி­ய­வி­ட­மாட்­டோம்.

“எந்த வித்­தை­யி­லும் ஆபத்து இருக்­கிறது. கழைக்­கூத்து எங்­களுக்குப் பழக்­க­மா­கி­விட்­டது என்­ப­தால் அந்­தக் கூத்­துக்கு எங்­கள் உட­லும் ஒத்­து­ழைக்­கிறது. இருந்­தா­லும் எப்­போ­துமே கவ­ன­மா­கத்­தான் இருந்­து­கொள்ள வேண்­டும்,” என்­கி­றார் திரு­வாட்டி புஷ்பா.

“இப்­படி நான்கு திசை­க­ளி­லும் ஊர் ஊரா­கச் சென்று வித்தை நடத்­தும் நாங்கள், ஆண்­டில் இரண்டு மாதம்­தான் மானா­ம­து­ரை­யில் சேர்ந்து இருப்­போம். அந்த இரண்டு மாத­மும் மழைக்­கா­லம் என்­ப­தால் எங்­கும் சென்று வித்தை காட்ட முடி­யாது.

“எங்­க­ளி­டம் ஒலி­பெ­ருக்கி, மின்னாக்கி இருக்­கின்­றன. வீடு இருக்கிறது. அவற்றை அடமானம் வைத்து பணத்தைக் கடன் வாங்­கு­வோம். தொழில் செய்து அவற்றை அடைத்­து­வி­டு­வோம்.

“சில நேரங்களில் தேவை­யான பொருள்­களை வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­வோம். ஒருநாளுக்குக் குறைந்தது ரூ.1,000 கிடைத்­தால்­தான் எங்­க­ளால் காலம் தள்ள முடி­யும்,” என்றார் திரு சௌந்­த­ர­ரா­ஜன்.

எப்படியும் வாழலாம் என்று இருப்போர் இருக்கிறார்கள். இனிமேல் இப்படித்தான் வாழ்க்கையை எதிர்நோக்க வேண்டும் என்று வாழும் சௌந்­த­ர­ரா­ஜன்-புஷ்பா தம்பதியும் இருக்கிறர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!