ஆறு மாநிலங்களில் இடைத் தேர்தல்: இண்டியா கூட்டணிக்கு முதல் சவால்

லக்னோ: கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று (5 செப் 2023) தொடங்கியது.

அனைத்துத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் செப்டம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் புதுப்பள்ளி, மேற்குவங்கத்தின் துக்புரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி மாவட்டங்களில் உள்ள போக்சாநகர், தான்பூர் தொகுதிகள். உ.பி.யின் கோஷி மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

அண்மையில் உருவான இண்டியா கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் முதல் நேரடி சவாலாக இந்த இடைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

புதுப்பள்ளி (கேரளம்)

புதுப்பள்ளித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி கடந்த ஜூலை 18ஆம் தேதி காலமானாா். கேரளத்தில் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவா், இரு முறை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளாா்.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் (37), பாஜக சார்பில் லிகின்லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜேக் சி தாமஸ் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

துப்குரி (மேற்கு வங்கம்)

மேற்குவங்கத்தின் துப்குரியை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியது. அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிஷு படா ரே கடந்த ஜூலை 25ல் காலமானார். அதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் பாஜக, திரிணாமூல், காங்கிரஸ் - இடதுசாரிக் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக தாபாசி ராய் என்பவரைக் களம் இறக்கியுள்ளது. இவரது கணவர் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றியபோது ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார். திரிணாமூல் காங்கிரஸ், கல்லூரிப் பேராசிரியர் நிர்மல் சந்திரா ராய் என்பவரைக் களமிறக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 45.65 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திரிணாமூல் 43.75 விழுக்காடு வாக்குகள் பெற்றது.

தன்பூர், போக்சாநகர் (திரிபுரா)

திரிபுராவின் தன்பூர், போக்சாநகர் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆளும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கே காங்கிரஸ், திப்ரா மோத்தா கட்சிகள் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பாகேஸ்வர் (உத்தராகண்ட்)

இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாஜகவின் சந்தன் ராம் தாஸ், அம்மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அவர், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதையடுத்து அங்கு நடைபெறும் இந்த இடைத் தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் நேரடி மோதலில் இறங்கியுள்ளது. இருப்பினும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் ஒளிமயமாக உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் சந்தன் தாஸ் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த முறை அந்தத் தொகுதியில் அவரது மனைவி பார்வதி தாஸை பாஜக களமிறக்கியுள்ளது.

கோஷி (உத்தரப் பிரதேசம்)

உத்தரப்பிரதேசத்தின் கோஷி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தாரா சிங் சவுஹான் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவில் இணைந்த அவர் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் தாரா சிங் சவுஹானுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி சுதாகர் சிங்கை களமிறக்கியுள்ளது.

தும்ரி (ஜார்க்கண்ட்)

தும்ரி சட்ட மன்றத் தொகுதியில் கேபினட் அமைச்சர் ஜகநாத் மஹதோ மறைவால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு என்டிஏ ஏஜேஎஸ்யு கட்சியின் யசோதா தேவியையும், இண்டியா கூட்டணி மறைந்த மஹதோவின் மனைவி பீபி தேவியையும் களமிறக்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!