மன அழுத்தம் தொடர்பில் விழிப்புணர்வு உரை

உலக அளவில் சுமார் 300 மில்லியன் மக்கள் மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண் மையில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் 2005 முதல் 2015க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 18% உயர்ந்துள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகா தார நாளாக கடைப்பிடிக்கப்படு கிறது. இவ்வாண்டு மன அழுத்தத் திலிருந்து விடுபடுவது பற்றிய அறிவுறுத்தல்களை முக்கிய பிர சாரமாக அந்நிறுவனம் முன்வைத் துள்ளது. அதனை வலியுறுத்தும் விதத் தில் தெம்பனிஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிக்குழுவின் சார் பில் சென்ற மாதம் 7ஆம் தேதி சுகாதாரச் சொற்பொழிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவர் சரவணன், தன் முனைப்புப் பேச்சாளர் ஜிட் புரு ஆகியோர் மன அழுத்தத்தி லிருந்து விடுபடுவது, மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது ஆகிவற்றுக்கான வழி முறைகளை முன்வைத்தனர். சுமார் 30 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தன்முனைப்புப் பேச்சாளர் ஜிட் புரு (இடமிருந்து 2வது) எழுதிய நூலின் பிரதியை திருவாட்டி முனுசாமி சிவரத்தினம் குலுக்கலில் வென்று பரிசாகப் பெற்றார். அவர்களுடன் தெம்பனிஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் எஸ். முரளி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ம.கணேசன் (வலது). படம்: தெம்பனிஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!