வாட்ஸ்அப்பில் விரைவில் இப்புதிய அம்சம்!

புத்தாண்டு பிறந்து ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், முன்னணிச் சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழும் வாட்ஸ்அப், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்றைச் சோதித்து வருகிறது.

அண்மைய ‘வாட்ஸ்அப் பீட்டா ஐஓஎஸ்’ பதிப்பில்,  புதிய குறுஞ்செய்தி குறித்து முகப்புத் திரையில் தோன்றும் அறிவிப்பில், அச்செய்தியை அனுப்பியவரின் முகப்புப் படமும் இடம்பெறுவதாக ‘டபிள்யூஏபீட்டாஇன்ஃபோ’ எனும் சமூக வலைப்பூச் செய்தி தெரிவிக்கிறது.

மேலுள்ள படத்தில், ஐஃபோன் முகப்புத் திரையில் புதிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தி குறித்த அறிவிப்புடன் அதை அனுப்பியவரின் முகப்புப் படமும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

அனுப்பியவரின் பெயர் மட்டும் இடம்பெறும்போது, அக்குறுஞ்செய்தியை அப்போதே பார்க்காமல் விட்டுவிட்டு, பிறகு பார்க்கலாம் என்று எண்ண வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அனுப்பியவரின் முகப்புப் படமும் தோன்றும்போது, குறிப்பாக அவர் குடும்ப உறுப்பினராக அல்லது நெருங்கிய நண்பராக இருந்தால், உடனே அச்செய்தியைப் பார்க்கும்படி பயனரைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!