செந்தோசாவில் ஒளிந்திருக்கும் சிங்கப்பூரின் மரபுடைமை

ஆ. விஷ்ணு வர்­தினி

செந்­தோசா தீவு, சுற்­றுப்­ப­ய­ணி­களின் உல்­லா­சத் தலம் மட்­டு­மன்று. அது சிங்­கப்­பூ­ரின் மர­பு­டை மை­யைப் பறை­சாற்­றும் ஒரு தல­மும் கூட.

செந்­தோ­சா­வின் வர­லாற்­றுச் சிறப்­பு­க­ளைப் பற்றி மேலும் அறிய, மூன்று மர­பு­டை­மைப் பாதை­களை தேசிய மர­பு­டை­மைக் கழ­க­மும் செந்­தோ­சாத் தீவு மேம்­பாட்டு கூட்டு நிறு­வ­ன­மும் இணைந்து அமைத்­துள்­ளன.

ஒவ்­வொரு பாதை­யும் செந்­தோ­சா­வின் ஒவ்­வொரு பரி­மா­ணத்­தை­நமக்­குக் காட்­டும்.

'கம்­போங் மற்­றும் ராணுவப் பயிற்­சி­யி­டம்' சேர்ந்த பாதை, செந்­தோசா மீன்­பிடிக் கிரா­ம­மாக விளங்­கிய காலத்­துக்கு நம்மை அழைத்­துச் செல்­லும்.

செந்­தோசா பண்­டை­யக் காலத்­தில் புலாவ் ப்லா­காங் மாதி என்று அழைக்­கப்­பட்­டது. மக்­க­ளின் வாழ்வா­தா­ரத்­துக்கு இத்­தீவு கை கொடுத்து வந்­தது.

புலாவ் ப்லா­காங் மாதி­யில் ஓராங் லாவுட் குடி­யி­னர் பல­கா­ல­மாக வசித்து வந்­த­னர். அவர்­க­ளது வாழ்க்கைமுறை­யைப் பற்றி முதல் பாதை­யா­னது எடுத்­துக்­கூ­றும்.

மேலும், உல்­லாச விடு­தி­க­ளாக மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டுள்ள கடந்­த­கால ராணு­வப் பயிற்சி மையங்­க­ளின் பின்­ன­ணி­யை­யும் மக்­கள் அறிந்து கொள்­வர்.

'அரண்­கள்' பாதை­யா­னது பழைய சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு முறை­க­ளை­யும் ராணுவ வர­லாற்­றை­யும் நமக்­குக் காட்­டும்.

கடைசி பாதை­யான, 'செந்­தோ­சா­வின் நினை­வு­கள்' என்ற பாதை, முற்­கா­லத்­தி­லும் தற்­கா­லத்­தி­லும் இருந்­து­வ­ரும் செந்­தோ­சா­வின் உல்­லா­சத் தலங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

இம்­மூன்று பாதை­களும் செந்­தோ­சா­வில் உள்ள 30 மர­பு­டை­மைத் தலங்­க­ளுக்கு நம்மை அழைத்­துச் செல்­லும்.

புகழ்­பெற்ற ஃபோர்ட் சிலோசோ, கேபிள் கார், கண்­ணைக் கவ­ரும் சிலோசோ கடற்­கரை ஆகி­ய­வை­யும் இவற்­றில் இடம்­பெற்­றுள்­ளன.

செந்­தோசா தனது 50 ஆண்டு நிறைவை இவ்­வாண்டு கொண்­டாடுகிறது. அதனை முன்­னிட்டு, 'முடி­விலா கண்­டு­பி­டிப்­பு­கள்' என்ற கருப்­பொ­ரு­ளுக்­கேற்ப, செந்­தோசா மர­பு­டை­மைப் பாதை­கள் மக்­க­ளுக்­குப் புது­மை­யான அனு­ப­வத்தை வழங்­கும்.

2020ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட செந்­தோசா மர­பு­டைமை ஆராய்ச்­சிப் பணி­கள், கொவிட்-19 சூழ­லால் ஒத்திவைக்­கப்­பட்­டிருந்தன.

16, 17ஆம் நூற்­றாண்­டு­களில் இருந்து தற்­போது வரை உள்ள பதி­வு­களும் சான்று­களும் இம்­முயற்­சியை வடி­வ­மைக்­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

செந்­தோசா மர­பு­டை­மைப் பாதை­ க­ளின் வரை­ப­டத்­தை­யும் துணை வழி­காட்­டி­க­ளை­யும் காண www.roots.gov.sg என்ற இணை­யத்­தளத்தை பொதுமக்­கள் நாட­லாம்.

இவ்­வாண்­டின் இறு­திக்­குள் மேலும் இரண்டு மர­பு­டை­மைப் பாதை­களைத் தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் அறி­மு­கப்­ப­டுத்த இருக்­கி றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!