கொவிட்-19 வந்துபோய்விட்டால் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுமா...

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக உல­கமே போரா­டி­வ­ரும் நிலை­யில் நம்­மில் சிலர், இன்­னும் கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டா­மல் தப்பி வரு­கி­றோம். சரி, கொவிட்-19 நமக்கு வந்­து­போய்­விட்­டால் எதிர்ப்பு சக்தி கிடைத்­து­வி­டும். நம் பாது­காப்பு வளை­யத்­தைச் சற்று கைவி­டு­வோமே என்று எண்­ணு­வோ­ருக்கு, நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அலை அலை­யாய் வந்­து­போய்­விட்­டன. இங்கு பத்­தில் அறு­வ­ருக்­கா­வது கொரோனா கிரு­மி­யால் குறைந்­தது ஒரு முறை பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று நாடா­ளு­மன்ற அமர்­வின்­போது சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

அத்­து­டன் அண்­மைய காலத்­தில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான ஒரு­வர், மீண்­டும் அதே கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் சாத்­தி­யம் குறைவு என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், கிரு­மித்­தொற்று வரா­மல் தடுப்­ப­தை­விட, அந்­தக் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, மீண்டு, எதிர்ப்பு சக்­தி­யைப் பெற்­று­வி­ட­லாம் என மக்­கள் நினைத்­து­வி­டக்­கூ­டாது என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

"அறி­கு­றி­கள் மித­மா­ன­தாக இருந்­தா­லும், மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­படும் நிலை­யில் ஒரு குறிப்­பிட்ட பிரி­வி­னர் இருக்­கவே செய்­கின்­ற­னர்," என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோவ் சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் ஆய்­வுத் துறை துணைத் தலை­வர் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் கூக் கூறி­யுள்­ளார்.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­படும் அபா­யம் இருப்­ப­து­டன் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து மீண்­ட­வ­ருக்­குக் கிடைத்­துள்ள எதிர்ப்பு சக்தி எத்­தனை காலம் நீடிக்­கும் என்­ப­தும் நிச்­ச­ய­மற்ற ஒன்­றாக இருப்­ப­தாக அதே பள்­ளி­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் நட்­டாஷா ஹாவர்ட் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, கொவிட்-19க்கு எதி­ரா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கும் கிரு­மித்­தொற்­றால் நீண்­ட­கால பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்­கி­றார் டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் எஷ்லி செயிண்ட் ஜான்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு களைப்பு, நெஞ்சு வலி, சுவைக்­கும் மற்­றும் நுக­ரும் தன்­மையை இழத்­தல் போன்ற அறி­கு­றி­கள் குறைந்­தது இரு மாதங்­க­ளுக்கு நீடிப்­பதே நீண்­ட­கால பாதிப்­பா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

எனவே, சிக்­கல்­கள் ஏற்­ப­டா­மல் இருக்க கிரு­மித்­தொற்­றுக்­குத் தங்­களை ஆளாக்­கிக்­கொள்­ளும் சாத்­தி­யத்தை மக்­கள் குறைப்­பதே வழி என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

இந்­நி­லை­யில், கொள்­ளை­நோய்க்கு பிந்­திய உல­கி­லும் முகக்­க­வ­சம் அணி­வது தொடர வேண்­டும் என்று அவர்­கள் வலி­யு­றுத்­தியும் வருகின்றனர்.

செய்தி: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!