சந்திரமுறைப் புத்தாண்டு: நம்பிக்கைகளும் வழக்கங்களும்

ஒவ்வொரு கலாசார விழாவையும் சுற்றி பல்வேறு நம்பிக்கைகளும் வழக்கங்களும் உள்ளன. அதேபோல சீனர்களும் பல்வேறு கிழக்கு ஆசிய நாட்டவர்களும் கொண்டாடும் சந்திரமுறைப் புத்தாண்டைச் சுற்றி பல வழக்கங்கள் உள்ளன.

சீனர்­கள் சந்­தி­ர­மு­றைப் புத்­தாண்­டின்­போது குடும்­பத்­தார், உற­வி­ன­ரு­டன் ஒன்­று­கூ­டு­வ­தற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்­ற­னர். புத்­தாண்­டுக்கு முந்­திய நாளில் குடும்­பத்­தா­ரு­டன் விருந்து உண்­பது அவர்­க­ளின் முக்­கிய வழக்­கங்­களில் ஒன்று. குறிப்­பாக சில அதிர்ஷ்ட உண­வு­வ­கை­கள் சீனப் பெரு­நாள் விருந்­து­களில் கட்­டா­யம் இடம்­பெ­றும்.

மூங்­கில் குருத்து, கரும்­பாசி, ‘எக் ரோல்’ எனப்­படும் முட்டை இனிப்பு வகை­கள் போன்­றவை வளப்­பத்­தின் குறி­யீ­டு­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன. கோழி, மகிழ்ச்­சி­யை­யும் திரு­ணத்­தை­யும் குறிக்­கின்­றன.

மீன் ஆசை­களை நிறை­வேற்­று­வ­தில் உத­வு­கிறது என்­பது சீனர்­க­ளின் நம்­பிக்கை.

மீனுக்­கான மாண்­ட­ரின் சொல், நிறைய என்ற சொல் போல ஒலிப்­ப­தால் சீனர்­கள் தங்­கள் விருந்­து­களில் மீனைச் சேர்த்­துக்­கொள்­கின்­ற­னர். ஆனால் அவர்­கள் விருந்­து­களில் மீனை உண்டு முடிப்­ப­தில்லை. அது அதிர்ஷ்­டம் முழு­வ­தை­யும் முடித்து விடு­வ­தற்­குச் சமம் என்று அவர்­கள் கரு­து­வ­தால் தட்­டில் சிறிது மீனை வைத்து விடு­கின்­ற­னர்.

முக்­கி­ய­மாக மாண்­ட­ரின் ஆரஞ்சு எனப்­படும் உரிக்­கும் ஆரஞ்­சு­கள், செல்­வம், தங்­கம், அதிர்ஷ்­டம் ஆகி­ய­வற்­றைக் குறிக்­கின்­றன என்­பது சீனர்­களின் நம்­பிக்கை.

அத­னால் சீனர்­கள் தங்­கள் வீடு­க­ளி­லும் அலு­வ­ல­கங்­க­ளி­லும் மாண்­ட­ரின் ஆரஞ்­சு­களை வைப்­ப­து­டன், உற­வி­னர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் செல்­லும்­போது அவர்­க­ளுக்கு வழங்­கு­கின்­ற­னர். அது­வும், மற்­ற­வர்­க­ளுக்கு மதிப்பு தரும் வகை­யில் இரண்டு கைக­ளி­லும் இரண்டு ஆரஞ்­சு­களை வைத்து அளிப்­பது சீனர்­க­ளின் வழக்­கம்.

புத்­தாண்டு நேரத்­தில் பார்க்­கும் அனை­வ­ரு­ட­னு­டம் உரை­யாடி, அவர்­க­ளின் உடல்­ந­ல­மும் வள­மும் பெருக வாழ்த்­துச் சொல்­வது சீனர்­க­ளின் வழக்­க­மா­கும்.

புத்­தாண்டு என்­றாலே பழை­யன கழி­த­லும் புதி­யன புகு­த­லும்­தான். அதைக் குறிக்­கும் வகை­யில் சந்­தி­ர­மு­றைப் புத்­தாண்­டுக்கு முன்­னர் சீனர்­கள் தங்­கள் வீடு களைச் சுத்­தம் செய்­வர்.

வீட்­டைச் சுத்­தம் செய்­யும்­போது கடந்த 12 மாதங்­களில் சேர்ந்த குப்­பையை மட்­டு­மல்ல துர­திஷ்­டத்­தை­யும் துடைத்து ஒழிப்­ப­தாக சீனர்­கள் நம்­பு­கின்­ற­னர்.

சிவப்பு நிறம் சீனப் புத்­தாண்­டில் பிர­தான இடம் வகிக்­கிறது. வெற்றி, விசு­வா­சம், அதிர்ஷ்­டம், மகிழ்ச்சி ஆகி­ய­வற்­றைச் சிவப்பு குறிப்­ப­தாக நம்­பும் சீனர்­கள், அந்­நி­றத்­தில் ஆடை­களை அணி­வது வழக்­கம். அத்­து­டன், வீட்­டுக் கத­வில் சிவப்பு அலங்­கா­ரங் களை­யும் தாள்­க­ளை­யும் அவர்­கள் வைப்­பர்.

மேலும், இளை­ய­வர்­க­ளுக்­குச் சிவப்பு நிற ஹங் பாவ் உறை­களில் பணத்தை வைத்து அளிப்­பது சீனர்­க­ளின் முக்­கி­ய­மான வழக்­கம். புத்­தாண்­டில் பணம் புழங்க வேண்­டும் என்­பது அவர்­க­ளின் நம்­பிக்கை. குறிப்­பாக, $2, $4, $6, $8 என இரட்­டைப் படை­யா­கத் தான் பணத்தை வழங்க வேண்­டும். நெருங்­கிய சொந்­தங்­க­ளுக்­கும் பெரி­ய­வர் ­க­ளுக்­கும் அவர்­கள் கூடு­தல் பணத்தை வழங்­கு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!