மகளிர் தினம்: ஒரு பார்வை

அனைத்­து­லக மக­ளிர் தின­மான இன்று, மக­ளி­ரைப் போற்ற பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கின்­றன. நூறாண்டு ­க­ளுக்கு மேல் போற்றப்பட்டு வரும் இந்நாள் கொண்டாட்டத் துக்கான நாள் மட்டுமல்ல.

மக­ளிர் உரி­மை­க­ளைக் கோர­வும் அவர்­க­ளின் சாத­னை­க­ளைப் பாராட்­ட­வும் ஒரு வாய்ப்­பாக இந்நாள் உள்ளது. 1900களின் தொடக்­கத்­தில் அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­யபிய நாடு­க­ளி­லும் பெண்­ணு­ரிமை குறித்த பெரும் நடைபெற்ற விவா­தங்கள் மக­ளிர் தினக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு வேராக அமைந்­தன.

1908ல் நியூ­யார்க் நக­ரில் 15,000 பெண்­கள் வாக்­கு­ரி­மை­யை­யும் இன்­னும் மேம்­பட்ட வேலைச் சூழ­லையும் கோரி­ வீதி­களில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

அந்த எழுச்­சி­யின் நினை­வாக 1909ல் அமெ­ரிக்­கா­வில் முதன்­ மு­றை­யாக தேசிய மக­ளிர் தினம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

1910ல் டென்­மார்க்­கின் கோபன்­ஹே­கன் நக­ரில் நடை­பெற்ற அனைத்­து­லக பணி­­பு­ரி­யும் மக­ளி­ருக்­கான மாநாட்­டில், அனைத்­து­லக மக­ளிர் தினம் கொண்­டா­டப்­பட வேண்­டும் என்று கிளாரா ஸேட்­கின் யோசனை தந்­தார். அதை சில நாடு­கள் ஏற்­றுக்­கொண்­டன. ஆனால் மக­ளிர் தினத்­துக்­கென்று குறிப்­பிட்ட தேதியை அறி­விக்­கா­மல், ஒவ்­வொரு நாடும், ஒவ்­வொரு தேதி­யில் கொண்­டா­டின.

1911ல் ஆஸ்­தி­ரியா, டென்­மார்க், ஜெர்­மனி, சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­களில் பெண்­ணு­ரி­மைக்கு ஆத­ர­வாக ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்­டோர் திரண்­ட­னர்.

ரஷ்­யா­வில் உழைப்­பாளி களின் சார்­பில் ஆர்ப்­பாட்­டங்­கள் திட்ட­மி­டப்­பட்ட நிலை­யில் அந்­நாட்­டுப் பெண்­கள் முன்­கூட்­டியே ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கி­னர். அந்­நா­ளான மார்ச் 8அம் தேதி பின்­னர் அனைத்­து­லக மக­ளிர் தின­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!