நிலவையும் தாண்டும் நெகிழி!

அண்மைய ஆய்வின்படி சிங்கப்பூரில் ஓர் ஆண்டிற்கு குறைந்தது 1.76 பில்லியன் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், நாளொன்றுக்கு ஒவ்வொருவரும் ஒரு நெகிழிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். 
இந்த தரவுகளைக் கொண்டு பார்த்தால், ஓராண்டிற்கு கிட்டத்தட்ட 467 மில்லியன் நெகிழி போத்தல்கள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு போத்தலின் நீளம் 23 சென்டிமீட்டர் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நீள்வரிசையில் அடுக்கினால் எவ்வளவு  தொலைவவிற்கு அது நீளும் என்பதை இங்கு காணலாம். 

ஒருநாள்: 
கிட்டத்தட்ட 1.3 மில்லியன் போத்தல்கள், அதாவது 294.3 கிலோமீட்டர். சிங்கப்பூரில் இருந்து ஏறத்தாழ கோலாலம்பூர் செல்ல முடியும்.

ஒரு மாதம்:
கிட்டத்தட்ட 38.9 மில்லியன் போத்தல்கள், அதாவது 8,829 கிலோமீட்டர். சிங்கப்பூரில் இருந்து பின்லாந்து செல்லலாம்.

ஆறு மாதங்கள்: 
ஏறத்தாழ 233.5 மில்லியன் போத்தல்கள், அதாவது 53,705 கிலோமீட்டர். உலகை 1.3 முறை சுற்றிவரலாம்.

நான்கு ஆண்டுகள்:
கிட்டத்தட்ட 1.87 பில்லியன் போத்தல்கள், அதாவது 429,644 கிலோமீட்டர்.  நிலாவிற்கு அப்பாலும் செல்ல முடியும்.

உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் போத்தல்களை மக்கள் வாங்குகின்றனர். அதாவது, நொடிக்கு 20,000 போத்தல்களை அவர்கள் வாங்குகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!