பொருள் அறிந்து கற்போம்

பொருள் அறிந்து கற்போம்

1 mins read
cb34b709-ce48-4ffe-a514-0b12e304fb8a
பாடல் வரிகள். - படம்: ஊடகம்

அரண் என்றால் மதிலாம்- தம்பி

அரன் என்றால் சிவனாம்

ஊண் என்றால் உணவாம்- தம்பி

ஊன் என்றால் இறைச்சியாம்!

துணி என்றால் துணிதலாம்- தம்பி

துனி என்றால் துன்பமாம்

தணி என்றால் அடங்கலாம் - தம்பி

தனி என்றால் தனிமையாம்!

தொடர்புடைய செய்திகள்

கணம் என்றால் நேரமாம்- தம்பி

கனம் என்றால் பளுவாம்!

திணை என்றால் ஒழுக்கமாம்- தம்பி

தினை என்றால் தானியமாம்!

திண்மை என்றால் வலிமையாம்- தம்பி

தின்மை என்றால் தீமையாம்

வேற்றுமையை அறிந்து படி- தம்பி

நீ வெற்றிநடை போடலாம் தம்பி.

குறிப்புச் சொற்கள்