விளையாட்டு வினையானது; குழந்தை நடிகை நடக்க முடியாமல் போனது

மலேசிய குழந்தை நட்சத்திரத்திடம் செய்த குறும்பு அவரது நடமாட்டத்தையே முடக்கிவிட்டது.

புத்தெரி ரஃபாஸ்யா என்னும் 12 வயது நடிகை கடந்த பிப்ரவரி மாதம் நாடகம் ஒன்றில் நடித்து வந்தார்.

அவர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்குத் தெரியாமல் நாற்காலியை நகர்த்தினார் மற்றொரு நடிகர்.

இதனால் இரும்புக்கம்பிகள்மீது விழுந்தார் புத்தெரி. அதனால் அவரின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. 

நரம்புகளும் பாதிக்கப்பட்டதால் கால்களிலும் அவர் உணர்ச்சியை இழந்தார். இதனால் புத்தேரியால் நடக்க முடியாமல் போய்விட்டது.

சக்கர நாற்காலியிலும் அணையாடை (diaper) அணிந்தும் சிரமமான வாழ்க்கையை புத்தெரி எதிர்நோக்குவதாக அவரின் தாயார் கூறினார்.

புத்தெரியால் தற்போது மெல்ல மெல்ல நடக்க முடிகிறது என்றும் ஆனால், அவரால் தொடர்ந்து நடக்கவோ நிற்கவோ முடியவில்லை என்றும் அவரின் தாயார் உருக்கமானதொரு பதிவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!