‘சினோவேக்’ தடுப்பூசி மருந்து மலேசியாவுக்குச் சென்று சேர்ந்தது

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவேக் முதற்தொகுதி தடுப்பூசி மருந்து இன்று (பிப்ரவரி 27) மலேசியா சென்றுசேர்ந்தது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்319 விமானம் மூலம் தடுப்பூசி மருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டது.

200 லிட்டர் அளவிலான இந்தத் தடுப்பூசி மருந்தை ஏற்றிவந்த விமானம் இன்று காலை மணி 9 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்தத் தடுப்பூசி மருந்தின் மூலம் மலேசியாவில் 300,000க்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போட முடியும்.

தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சரும் அறிவியல், தொழிற்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சருமான திரு கைரி ஜமாலுதின், போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதின் உசேன், மலேசியாவுக்கான சீனத் தூதர் உவ்யாங் யுஜிங் ஆகியோர் தடுப்பூசி மருந்து வந்து இறங்குவதைப் பார்வையிட விமான நிலையத்தில் இருந்தனர்.

மலேசியா, 14 மில்லியன் சினோவேக் தடுப்பூசி மருந்து அளவைக் கட்டங்கட்டமாகப் பெறவிருக்கிறது. இவற்றைக் கொண்டு மலேசிய மக்கள்தொகையில் 22 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட முடியும்.

மலேசியாவில் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நாட்டில் முதலாவதாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தடுப்பூசித் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் வரை நீடிக்கும் முதல் கட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இடம்பெறும் இரண்டாம் கட்டத்தில், தொற்றால் பாதிப்படையக்கூடியவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோருக்கும் தடுப்பூசி போடப்படும்.

மே மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கவுள்ள மூன்றாம் கட்டத்தில் மக்கள்தொகையில் எஞ்சிய பிரிவினருக்குத் தடுப்பூசி போடப்படும்.

மலேசியாவுக்கு சென்றுசேர்ந்த ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்து முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “அந்த தடுப்பூசி மருந்து சினோவேக், ஸ்புட்னிக் வி, ஆஸ்ட்ரசெனிகா அல்லது வேறெந்த நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் முதலில் எந்தத் தடுப்பூசி மருந்து அங்கீகரிக்கப்படுகிறதோ அதை முதல் நபராக நான் போட்டுக்கொள்ள இருக்கிறேன்,” என்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு கைரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!