சாலை, கட்டுமானப் பணிகளால் துண்டிக்கப்படும் கம்பிவடம்

அதிகமான சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள் மற்றும் அந்தப் பணிகளின் ஒப்பந்ததாரர் கள் போதுமான சிரத்தையும் கவ னமும் எடுத்துக்கொள்ளத் தவறி யது போன்றவற்றால் கம்பிவடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்ததாக தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கடந்த 2013, 2014ஆம் ஆண்டு களில் கம்பிவடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் நான்காக இருந்தன என்றும் இது 2015ல் ஏழாக உயர்ந்தது என்றும் அமைச்சர் யாக்கூப் குறிப்பிட்டார். "இந்த ஆண்டில் ஏற்கெனவே அத்தகைய மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன," என்றும் திரு யாக்கூப் சொன்னார்.

மத்திய விரைவுச்சாலை - அங் மோ கியோ அவென்யூ 5 சந்திப்பில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஒப்பந்ததாரர் ஒருவர் வடிகால், கழிவுநீர்ப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது கண் ணாடி இழை துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக செங்காங் வட்டாரத்தில் சுமார் 2,000 குடும் பங்கள் பாதிக்கப்பட்டன. சென்ற மாதம் 17ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கண் ணாடி ஒளியிழை துண்டுபட்டதால் காமன்வெல்த், கிம் மோ பகுதி களில் உள்ள பல குடியிருப்புகளில் இணைய சேவை தடைபட்டது. "டௌன்டவுன் வழித்தடம், தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடம் போன்ற புதிய எம்ஆர்டி பணிகள், மின்கம்பிவடப் பணிகள், தண் ணீர், கழிவுநீர்க் குழாய்ப் பணிகள் மற்றும் இதர மேம்பாட்டுப் பணி களில் சம்பந்தப்பட்ட மூன்றாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 2013 முதல் நிகழ்ந்த கம்பிவடம் துண் டிக்கபட்ட 18 சம்பவங்களுக்குக் காரணம்," என்று திரு யாக்கூப் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!