ஆஸி. வெற்றி; ரோகித் சர்மா சதம் வீண்

பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி உள்ளது. பெர்த்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரனும், ஆஸ்திரேலிய அணியில் பாரிஸ், போலந்து ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அறிமுகமானார்கள்.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடித்தது. ரோகித் சர்மா, தவான் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். தவான் 22 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோகித் சர்மாவுடன் விராத் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எந்தவொரு சூழ்நிலையிலும் விக்கெட்டை இழக்கும் வகையில் அவர்கள் விளையாடவில்லை.

அதேசமயம் அவர்களால் அதிரடியாக விளையாட முடிய வில்லை. இந்திய அணி சரியாக 10 ஓவர்கள் முடிவில் 50 ஓட்டங்களைத் தொட்டது. ரோகித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தியா 21.1 ஓவர்களில் 100 ஓட்டங்களைத் தொட்டது. கோலி 61 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தியா 30.2 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 122 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய கோலி 91 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.+0800

இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்ததும் அரங்கில் கூடியிருக்கும் ரசிகர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் தமது மட்டையை உயர்த்திக் காட்டுகிறார் ஆஸ்திரேலியாவின் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!