பெண் பணியாளர்கள் மட்டுமே இயக்கிய விமானங்கள்

சென்னை: அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி, முழுக்க பெண் பணியாளர்களை மட்டுமே கொண்டு மூன்று விமானங்களை இயக்கியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம். அம்மூன்று விமானங்களுமே சென்னையில் இருந்து இயக்கப் பட்டன. அவற்றுள் இரு விமானங் கள் டெல்லி, மும்பைக்குப் பறந் தன. டெல்லி சென்ற விமானத்தில் கேப்டன் சோனியா ராணியும், பன்குரி அகர்வாலும் விமானிகளாகச் செயல்பட, விமான பணியாளர்களாக மிட்செல், விஜயா னந்தி, நகாலா, சைஜா, ரைசா ஆகியோர் பணியில் இருந்தனர்.

"இந்தப் பயணம் பரவசத்தை தந்தது. அதிலும் மகளிர் தினத் தில் இயக்கப்பட்ட விமானம் என்ப தால் இந்தப் பயணம் மேலும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இது எனது நீண்ட நாள் கனவு. நாம் கனவு கண்டால்தான் அது ஒரு நாள் நனவாகும்," என்று தலைமை விமானி சோனியா ராணி தெரிவித்தார். விமானம் பறந்து கொண்டிருந்த போது, அந்தப் பயணத்தில் பெண்கள் மட்டுமே விமானப் பணிகளை கையாள்வதாக நடு வானில் அறிவிக்கப்பட்டதும், பய ணிகளும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

விமானப் பயணத்திற்கு முன் பெண் பணியாளர்கள் (படம்: ஊடகம்)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!