நடிகை குஷ்பு: கடந்த முறை மக்கள் தவறு செய்துவிட்டனர்

திருவண்ணாமலை: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தமிழக மக்கள் தவறு செய்து விட்டதாக நடிகையும் காங்கி ரஸ் செய்தித் தொடர்பாளரு மான குஷ்பு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக அரசு தாலிக்கு தங்கம் அளித்து விட்டு, அதை டாஸ்மாக் மதுக்கடைகள் மூலமாகப் பறித்துக் கொள்வதாக குற்றம்சாட்டினார். "அதிமுக ஆட்சியில் எங்கு சென்றாலும் செய்வீர்களா, செய்வீர்களா என்று மக்களைப் பார்த்து கேட்டனர். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அப்படியென்ன செய்தனர்?

"மக்களுக்காக வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தனரா என்றால் இல்லை. சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் இயற்கை அல்ல செயற்கையானது. அந்த வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை," என்றார் குஷ்பு. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலில் செய்த தவறை தமிழக மக்கள் மீண்டும் செய்யக் கூடாது என்றார். "தாலிக்கு தங்கத்தை கொடுத்துவிட்டு அதை மதுக் கடைகள் மூலம் பறிக்கிறார் கள். அப்படி அவர்கள் அளிக் கும் தங்கம் உங்களுக்குத் தேவையா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!