லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் வெற்றிபெற்றன.
புல்ஹாம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 1- 0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் யுனைடெட் அணித் தலைவர் புருனோ பெர்ணான்டஸ் கோல் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு போர்ன்மோத்தை பந்தாடியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய சிட்டி 6 -1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆர்சனல் குழு நியூகாசல் யுனைடெட் அணியுடன் 1-0 அதிர்ச்சி தோல்வியடைந்தது.