வாகன காப்புறுதி மோசடிகளை அரங்கேற்ற உதவிய ஆடவருக்கு 6 ஆண்டு சிறை

திட்­ட­மிட்டு வாகன விபத்­து­களை அரங்­கேற்றி அதன்­மூ­லம் மில்­லி­யன் கணக்­கான தொகையைக் காப்­பு­று­தி­யா­கப் பெறு­வ­தற்கு உத­வி­ய­தாக ஆட­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று 74 மாதச் சிறைத் தண்டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. முன்னாள் விநியோகிப்புப் பணி­யா­ள­ரா­'கப் பணி­யாற்­றிய 37 வயது ரஹ்­மத் முக­மது, தன் மீது சுமத்­தப்­பட்ட 25 ஏமாற்ற உடந்தை­யாக இருந்தது, ஏமாற்றத் தூண்­டி­யது போன்ற குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்டார். இவ­ருக்கு தண்டனை வழங்­கும்­போது இவர் மீது இருந்த குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன. திட்­ட­மிட்டு ஏமாற்று வேலை­களை அரங்­கேற்­றும் 29 பேர் கொண்ட கும்ப­லுக்­காக அக­மது வேலை பார்த்து வந்தார்.

2011 மே மாதம் முதல் 2013 அக்­டோ­பர் மாதம் வரை­யி­லான கால­கட்­டத்­தில் மட்­டும் மொத்தம் 16 காப்­பு­றுதி நிறு­வ­னங்கள் ஏமாற்­றப்­பட்ட சம்ப­வங்களில் இவ­ருக்­குத் தொடர்­புள்­ள­தா­கக் கூறப்­படு ­கிறது. மோச­மான வாக­னக் காப்­பு­றுதி தில்­லு­முல்லு வேலை­களில் இவர் பல­த­ரப்­பட்ட வகை­யில் பங்காற்­றி­யி­ருக்­கிறார் என தீர்ப்பு வழங்­கும்­போது மாவட்ட நீதி­பதி லோ வீ பிங் கூறினார். மோசடி வேலை­களில் ஈடு­பட்ட அந்தக் கும்ப­லுக்கு முக்­கிய புள்­ளி­யாக செயல்­பட்ட அக­மது, போலி­யான ஓட்­டு­நர்­களை­யும் பய­ணி­களை­யும் நிய­மித்து காப்­பு­று­திப் பணம் பெறு­வ­தில் தில்­லு­முல்லு செய்­தார். ஒரு முறை பாதிக்­கப்­பட்ட பய­ணியைப் போல் நடித்து 52,000 வெள்ளி காப்­பு­று­திக் கோர­லுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்தார். ஆனால் அந்தப் பணம் அவ­ருக்குக் கிடைக்கவில்லை. சொத்­துச் சேதம் குறித்து 44 முறை­யும் தனிப்­பட்ட காயங்களுக்­காக 70 முறை­யும் $1.14 மில்­லி­யன் காப்­பு­றுதி கோரிய மோசடி செயல்­களில் ஈடு­பட்­டுள்­ளார். மோச­டி செயல்­களுக்கு தூண்­டு­கோ­லாக இவர் செயல்­பட்­ட­தால், காப்­பு­றுதி நிறு­வ­னங்க­ள் $215,678 இழந்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!