மசெகவிலிருந்து வெண்டி லிம்மும் விலகினார்

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஓங்குடன் திருமணத்துக்குப் பிந்திய தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் வெண்டி லிம் தாமாகவே முன்வந்து மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் என்று சேனல் நியூஸ் ஏசியா செய்தி மூலம் அறியப்படுகிறது. சென்ற சனிக்கிழமை சொந்தக் காரணங்களுக்காக கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப் பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக திரு ஓங் அறிவித்தார். இந்த நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதாகக் கூறப்பட்ட வெண்டி லிம்மும் கட்சியிலிருந்து விலகிய தாகக் கூறப்படுகிறது.

'பசிபிக் இன்டக்ரேட்டட் லாஜிஸ்டிக்ஸ்' என்ற நிறுவனத்தில் தளவாட விற்பனை இயக்குநராகப் பணியாற்றிவரும் வெண்டி லிம் தற்போது விடுமுறையில் இருப் பதாக நம்பப்படுகிறது. நேற்று முன்தினம் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அந்நிறுவனம், "அது அவரது தனிப்பட்ட சொந்த விவகாரம்," என்று கூறியது. இதற்கிடையே திரு ஓங்கின் பதவி விலகலை ஏற்றுக் கொள் வதாகத் தெரிவித்த நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப், அவரது இடம் காலியானதையும் உறுதி செய்தார். மக்கள் செயல் கட்சியிலிருந்து திரு ஓங் விலகியதையும் பிரதமர் லீ சியன் லூங் ஏற்றுக் கொண் டுள்ளார். இந்நிலையில் புக்கிட் பாத் தோக் தனித் தொகுதியில் காலி யான இடத்தை நிரப்ப சில வலுவான வேட்பாளர்களை மசெக பரிசீலித்து வருவதாக துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!