நாயகிகளின் செல்லப்பெயர்

நம்மைப் போலவே நடிகர், நடிகைகளுக்கும் கூட செல்லப் பெயர் உண்டு. பெரும்பாலும் அது வெளியே தெரிவதில்லை. முன்பெல்லாம் சம்பந்தப்பட்டவர்களும் அதை விரும்புவதில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. ரசிகர்களும் தங்களது செல்லப் பெயரை அறிந்துகொள்ளட்டும், அதைக் கொண்டே நம்மை அழைக்கட்டும் என்று நடிகைகளும் கருதுகிறார்கள். அந்த வகையில் சில இளம் நாயகிகளின் செல்லப் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இளம் நாயகி ஸ்ரீ திவ்யாவை அவரது தாய்க்குலம் 'சின்னி கொடுக்கு' என்றுதான் அழைப்பாராம். காரணம் அம்மணி வீட்டில் ரொம்ப சேட்டை செய்வார் எனக் கேள்வி. "என்னுடைய சேட்டைகளைப் பார்த்து, 'உன்னைப் பையன் மாதிரி வளர்த்துட்டோம்' என்று அம்மா அடிக்கடி சொல்வார். 'கொடுக்கு' என்றால் தெலுங்கில் பையன் என்று அர்த்தம். அதாவது பையனைப் போல சேட்டை செய்வேனாம். பள்ளியில் படித்தபோது அடிக்கடி 'மிஸ்டர் பீன்' நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். எனக்கு ரொம்பப் பிடித்தமான நிகழ்ச்சி.

அதனால் எனது தோழிகள் என்னை 'மிஸ் பீன்' என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இவைதான் எனது செல்லப் பெயர்கள் என்கிறார் ஸ்ரீதிவ்யா. நடிகை நந்திதாவை அவரது நட்பு வட்டாரத்தில் 'குட் டே' என்று கூப்பிடுகிறார்கள். காரணம், நந்திதா பார்ப்பதற்கு பிஸ்கட் போல இருக்கிறாராம். அதனால் ஒரு பிஸ்கட்டின் பெயரையே அவரது செல்லப் பெயராக்கிவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!