தூய்மை, தொண்டூழியம்; குடும்பங்களுக்கு வெகுமதி

ஜூரோங் சென்ட்ரலில் வசிக்கும் சுமார் 400 குறைந்த வருமான குடும்பங்களுக்கு நேற்று $195,000 மதிப்புள்ள உணவுப் பொருட்களும் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களும் வெகுமதியாக வழங்கப்பட்டன. தங்களுடைய குடியிருப்புப் பேட்டையைச் சுத்தமாக வைத்திருப் பதிலும் தொண்டூழியத்திலும் காணப்பட்ட முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு இந்த வெகுமதி கிடைத்தது. 'கையோடு கைசேர்க்கும் திட்டம்' என்ற ஒரு திட்டம் 2014ல் தொடங்கப்பட்டது.

ஜூரோங் சென்ட்ரலில் ஓரறை, ஈரறை வாடகை வீடுகளில் வசிப் போர் தங்களுடைய புளோக்கின் பொது இடங்களையும் நடைவழியை யும் சுத்தமாக வைத்திருக்க அந்த திட்டம் குடியிருப்பாளர்களுக்கு ஊக்கமூட்டுகிறது. இதற்கு முயற்சிகளை மேற் கொள்ளும் குடியிருப்பாளர்கள் மாதாமாதம் $30 மதிப்புள்ள உணவுப்பொருட்களையும் அடிப் படை அத்தியாவசியப் பொருட் களையும் வெகுமதியாகப் பெறு வார்கள். அந்த வட்டாரத்தில் 462 வாடகை வீடுகளில் குடும்பங்கள் வசிக்கின்றன. ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 373 மற்றும் 374ல் அந்த வீடுகள் இருக்கின்றன.

குடியிருப்புப்பேட்டையில் குப்பை களை அப்புறப்படுத்துவது, சமூக தோட்டங்களில் உதவுவது போன்ற சமூகச் சேவைச் செய்யும் தொண்டூ ழியரை கொண்டுள்ள குடும்பங் களுக்கு மாதாமாதம் $120 மதிப் புள்ள பொருட்களும் வெகுமதி யாகக் கிடைக்கும். குடியிருப்புப் பேட்டையில் சுற் றுக்காவலை மேற்கொள்வது, சமூகத் தோட்டக் கலையில் ஈடு படுவது, புளோக்கை சுத்தப்படுத்து வது போன்ற பல்வேறு சமூக நடவடிக்கைகளில் இதுவரை 50 குடும்பங்கள் தொண்டூழியம் செய்து வருகின்றன.

மாதத்தின் கடைசி சனிக் கிழமை அன்று இத்தகைய குடும்பங்கள் தங்களிடம் இருக்கும் சீட்டுகளைக் கொடுத்து உணவு, அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்கின்றன. இந்தத் தேதிகளில் இலவசமாக முடி வெட்டிக்கொள்ளலாம். வேலை வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ள லாம். துணைப்பாட வகுப்புகளை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

ஜூரோங் சென்ட்ரலில் இருக்கும் ஒரு புளோக்கின் கூரையில் இருந்த சமூகத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னமும் குடியிருப்பாளர்களும். (இடமிருந்து) அசாரி ரஃபி, கதிஜா அட்னன், கமிஷா அட்னான், (தோட்டத்தின் தலைவர்), துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், சான் கியூ, ஃபூ யிப் சும், ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங், டான் ஆ காவ் ஆகியோர். படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!