இந்தியா=பங்ளாதேஷ் எல்லை முழுதும் மூடல்

புதுடெல்லி: இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் ஊடுருவல் பிரச்சி னையை எதிர்நோக்கும் இந்தியா, அடுத்த ஆண்டில் அந்தப் பகுதி யில் உள்ள எல்லையை முழுமை யாக மூட முடிவு செய்துள்ளது. பங்ளாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் பலர் ஊடுருவி வருகின்றனர். இதனைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் மத் திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா= பங்ளாதேஷ் எல்லையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழுமையாக மூட அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி எல்லை ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் அசாம் மாநிலத் தில் ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி இந்திய=பங் ளாதேஷ் எல்லை மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே ஊடுருவல் பிரச்சினை குறித்துப் பேசிய அசாம் மாநில முதல்வர் சர் பானந்த சோனோவால், "பங்ளா தேஷ் எல்லை நிரந்தரமாக மூடப் பட்டால் ஊடுருவல் தானாக குறையும்.

இதுதவிர ஊடுரு வலைத் தடுப்பதற்கு எல்லை யோரம் வசிக்கும் மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும்," என்றார். "இந்தியா-பாகிஸ்தான் எல் லையில் உள்ள வாகா எல்லைச் சாவடியைப் போல பங்ளாதேஷ் எல்லையில் சாவடி அமைக்கப் படும். "வாகா எல்லையில் நடை பெறும் நிகழ்ச்சிகளைப்போல இங்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்," என்று அவர் கூறினார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!