லஞ்சம் வேண்டாம்: சகாயம் வலியுறுத்து

சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்க லஞ்சம் பெறக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளித் தொகுப்பு ஒன்றில், அரசியலில் நேர்மையைக் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகத்தில் இருந்து அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி களைத் தொடங்க வேண்டும் என்றார்.

"தூய சமூகத்தை, நேர்மையான சமூகத்தைக் கொண்டு வருவதன் மூலம் அரசியலில் நேர்மையைக் கொண்டு வரமுடியும். மக்களின் ஆற்றல்கள் அனைத்தும் சமூகத்தை நோக்கியே செல்ல வேண்டும். உங்களின் ஆற்றலை சமூகப் பணிகளில் ஈடுபடுத்துங் கள். நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும்," என்று சகாயம் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு ஆதாரமான ஏரி குளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், நதிகளைப் பாதுகாப்பதன் மூலம், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும் என்றார்.

"ஏழை விவசாயிகளுக்குப் படித்தவர்கள் உதவவேண்டும். நெசவாளர்களின் நிலை பரிதாபகர மாக உள்ளது. மாற்றுத்திறனாளி களுக்கும் திருநங்கைகளுக்கும் உதவ முன்வர வேண்டும். படித்த நாம் மக்களுக்கு வழிகாட்டலாம். ஆக்கபூர்வமான சமூகப் பணி களைச் செய்ய வேண்டும்," என்று சகாயம் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!