‘கிராப்’, ‘கோஜெக்’ இணைய வாய்ப்பு

தனி­யார் வாகன வாட­கை சேவையை நல்­கும் நிறு­வ­னங்­க­ளான ‘கிராப்’பும் ‘கோஜெக்’கும் தங்­க­ளுக்கு இடை­யி­லான உடன்­பாட்டை எட்­டு­வ­தற்­கான பணி­களில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றத்தை அடைந்­தி­ருப்­ப­தா­கத் தக­வல்­கள் வெளி­வந்­துள்­ளன.

இரு நிறு­வ­னங்­களும் ஒரு நிறு­வ­ன­மாக இணை­வ­தற்­கான அந்த ஒப்­பந்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் அதுவே தென்­கி­ழக்­கா­சி­யா­வில் இந்த வகை­யைச் சேர்ந்த ஒப்­பந்­தங்­களில் ஆகப் பெரி­தாக இருக்­கும்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஆக மதிப்­பு­மிக்க இந்த நிறு­வ­னங்­கள், தங்­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பா­டு­க­ளைப் பெரு­ம­ள­வில் களைந்­துள்­ளன.

இருந்­த­போ­தும், இந்த ஒப்­பந்­தங்­க­ளின் சில கூறு­கள் தொடர்­பில் தனிப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­கள் தொடர்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஒரு நிறு­வ­ன­மாக இணைந்த நிலை­யில் ‘கிராப்’ மற்­றும் ‘கோஜெக்’ சந்­தை­யில் பங்­கு­களை விற்க முற்­பட முனை­வ­தா­க­வும் இது குறித்த விவ­ரங்­க­ளைத் தெரிந்­துள்ள பெயர் குறிப்­பி­டப்­ப­டாத சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த நிறு­வ­னங்­க­ளின் மூத்த தலை­வர்­கள், ஒப்­பந்த விவ­ரங்­களை மறு­ஆய்வு செய்­வ­தா­க­வும் இதில் கிராப் நிறு­வ­னத்­தின் முத­லீட்­டா­ள­ராக ஸாஃப்ட்­பெங்க் குழு­மத்­தின் திரு மசா­யோஷி சன் பங்­கு­பெ­று­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஒரே நிர்­வா­கக் குடை­யில் இணை­யும் இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு கிராப்­பின் இணை நிறு­வ­னர் ஆண்டனி டான் தலைமை நிர்­வா­கி­யாக செயல்­ப­ட­லாம். அத்­து­டன் ‘கோஜெக்’ நிர்­வா­கி­கள் இந்த வர்த்­த­கத்தை இந்­தோ­னீ­சி­யா­வில் ‘கோஜெக்’ சின்­னத்­தின்­கீழ் நடத்­து­வர் என்று இவர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஆயி­னும், தற்­போ­தைக்கு ஒப்­பந்­தம் தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தை­கள் உறு­தி­யான கட்­டத்தை இன்­னும் எட்­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. இது குறித்து கிராப், கோஜெக், ஸாஃப்ட்­பெங்க் நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் எவரும் அதி­கா­ர­பூர்­வ­மாக கருத்­து­க்கூற மறுத்­துள்­ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!