வரவுசெலவுத் திட்டம் 2021: அதிக வருமானம் உள்ளவர்கள் அதிக வரி செலுத்தும் முறை தொடரும்

சிங்கப்பூரில் ஆக அதிக வருமானம் பெறும் 20 விழுக்காடு குடும்பங்களும் இந்நாட்டில் தங்கும் வெளிநாட்டவர்களும் பொருள் சேவை வரியின் மொத்த தொகையில் 60 விழுக்காட்டுக்கு மேல் பங்களிப்பதாக துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தையும் சுற்றுப்பயண ‘திருப்பிக் கொடுத்தல்’ (Refund) திட்டத்தின் மூலம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பொருள் சேவை வரியையும் கருத்தில் கொள்ளப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டதாக திரு ஹெங் கூறினார். இந்த இரண்டாவது திட்டத்தின்கீழ் பொருட்கள் உள்ளூரில் வாங்கப்பட்டு வெளிநாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் சிங்கப்பூர் அதிகமாக சம்பாதிப்பவர்கள் அதிகமான வரி செலுத்தக்கூடிய படிப்படியான வரிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடும்பங்களில் ஆக அதிக வருமானம் ஈட்டும் 20 விழுக்காட்டினர், வரிகளில் 56 விழுக்காட்டைக் கட்டினர். இவர்கள் 11 விழுக்காடு அரசாங்க அனுகூலங்களைப் பெற்றனர். ஆகக் குறைவான வருமானத்தை ஈட்டும் 20 விழுக்காட்டினார் வரிகளில் 9 விழுக்காடு கட்டி, 27 விழுக்காடு அனுகூலங்களைப் பெறுகின்றனர்.

அதே நேரத்தில் பொருளியல் அதிர்ச்சிகளைத் தாங்கக்கூடிய மீள்திறன் சிங்கப்பூரின் வரிக் கட்டமைப்புக்கு இருக்கவேண்டும் என்றார் திரு ஹெங்.

அனைத்துலக அளவில் வரிகளில் ஏற்படும் மாற்றம் குறித்தும் தன் வருவாய்களில் ஏற்படும் ஆபத்தும் குறித்து சிங்கப்பூர் விழிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.

பிஇபிஎஸ் 2.0 ( BEPS 2.0) திட்டத்தின்படி அனைத்துலக வரி விதிமுறைகளை மறுஆய்வு செய்வது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது நடைபெறுவதைச் சுட்டிய திரு ஹெங், அக்கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகள் நடப்புக்கு வந்தால் சிங்கப்பூரின் வர்த்தக வருவாய் பாதிக்கப்படலாம் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

அனைத்துலக வர்த்தக விதிமுறைகள் மாறும்போது, சிங்கப்பூரின் வர்த்தக வரி கட்டமைப்புக்கு உரிய மாற்றங்களைச் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!